குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெசன்ட்நகரில் கோலம் வரைந்து மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன. முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தியதில், இரு தரப்பு மக்களும் காயமடைந்ததை அடுத்து டெல்லியில் நடந்த போராட்டம் கசப்பாக மாறியது.
இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரி மாணவ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையாகவும் பல இடங்களில் வெடித்தது. இதனால் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். வன்முறை சம்பவங்களில் பலர் பலியாகினர்.
சென்னை பெசன்ட்நகர் பகுதியில் மாணவியர் சிலர் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த அடையாறு சாஸ்திரி நகர் போலீசார் கோலம் வரைவதற்கு அனுமதி மறுத்தனர். ஆனாலும், சில மாணவிகள் அந்த இடத்தில் இருந்து நகரவில்லை.இதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.
இந்நிலையில் தற்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை பெசண்ட் நகரில் கோலம் வரைந்த ஏழு பேர் காவலில் எடுக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
Chennai: Police releases the seven persons who were detained earlier today in Besant Nagar over charges of unlawful assembly and for making rangoli against #CitizenshipAmendmentAct, without prior permission. #TamilNadu pic.twitter.com/jcj0hCjFA4
— ANI (@ANI) December 29, 2019
J5 சாஸ்த்திரி நகர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் இந்த 7 பேரும் தடுத்து வைக்கப்பட்டு, ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.
மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.