ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணிமேடு முதல் பிரிவில் பணி புரியும் மணிமேகலை கணவர் புஸ்பராஜ் வயது 53 இவர் அப்பகுதியில் சுப்ரவைசராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் ஆவாரம் மேஸ்திரி கடை அருகாமையில் உள்ள 22 ம் நெம்பர் காட்டில் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதத்தில் தேயிலைத் தோட்ட த்தில் பதுங்கி இருந்த கரடி அவருடைய இடது காலை கடித்து குதறியது. இவர் அலறல் சத்தம் கேட்டு உடன் இருந்த பணியாளர்கள் விரைந்து வந்தனர்
புஸ்பராஜ் சத்தமிட்டதால் அவரை விட்டு விட்டு சென்றது . உடனடியாக வனத்துறைக்கும் நிர்வாகத்திற்கும் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்டவரை அதிகாரிகள் உருளிக்கல் மத்திய பொது மருத்துவமனைக்கு தனியார் வாகனத்தில் கொண்டு சென்றனர். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் பகல் நேரத்தில் தேயிலைத் காட்டிற்குள் பதுங்கியிருந்து தாக்கியதால் தேயிலைத் தோட்ட தொழிலாளர் அச்சத்தில் பணி புரிந்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. எனவே வனத்துறையினர் கூறுகையில் பணிக்கு செல்லும் போது கூட்டமாக செல்ல வேண்டும் ஏன கூறினார்
இதனை அறிந்த வால்பாறை நகர மன்ற தலைவி அழகு சுந்தரவள்ளி செல்வம் முன்னால் கவுன்சிலர் செல்வம். 18வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி பாண்டி. கவுன்சிலர்கள் அன்பரசு கவிதா. மற்றும் மகேந்திரன், நேரில் சென்று ஆறுதல் கூறி நகர மன்ற தலைவி நிவாரணம் வழங்கினர்.
மேலும் படிக்க: ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்துகொண்டது ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ