இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டுனர்.. ஆட்டோவிலிருந்து குதித்த பெண்

Sexual Harassment: இரவு நேரத்தில் ஆட்டோவில் சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓட்டுனர். தப்பிக்க ஆட்டோவிலிருந்து வெளியே குதித்த பெண்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 31, 2022, 12:50 PM IST
இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டுனர்.. ஆட்டோவிலிருந்து குதித்த பெண் title=

Sexual Harassment: ஈரோடு மாவட்டம் கோட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் கோவையில் கடந்த பத்து மாதங்களாக தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் சென்ற இளம் பெண் கோவை திரும்ப இரவு தாமதம் ஆகியிருக்கிறது. நள்ளிரவு 12:30 மணியளவில் பேருந்து மூலம் கோவையை அடைந்த இளம் பெண் - பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் இறங்கி ரேபிடோ செயலி மூலம் ஆட்டோ ஒன்று புக் செய்துள்ளார். ஆட்டோ வந்தவுடன் ஆட்டோவில் ஏறி சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநர் இளம் பெண்ணிடம் காலையில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆட்டோவை நிறுத்துமாறு அந்த இளம் பெண் கூச்சலிட, அதை எதையும் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து ஆட்டோவை ஓட்டிச் சென்றதால், அந்த நபரிடமிருந்து தப்பிக்க முயன்ற இளம் பெண், பீளமேடு ஃபன் மால் அருகே சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவிலிருந்து வெளியே குதித்தார். 

மேலும் படிக்க: குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி!

இதில் தலை மற்றும் கால்களில் காயம் அடைந்த பெண், தனக்கு நடந்த துரயத்தை தனது நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததும், அங்கு விரைந்து வந்த நண்பர்கள் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர்.  இது தொடர்பாக அந்த பெண் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இளம்பெண்ணை ஆட்டோவில் ஏற்றி அத்துமீறலில் ஈடுபட்ட நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த சாதீக் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சாதிக்கை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: உறவினர் மகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுக்கு பத்தாண்டு சிறை தண்டனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News