புதுடெல்லி: இன்று நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கின்றன. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் இன்று நடக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மிகப்பெரிய ஆளுமைகளான முன்னாள் முதல்வர்கள் செல்வி ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் இல்லாத முதல் தேர்தல் இது என்பதால், இத்தேர்தல் அதிக அளவு முக்கியத்துவத்தைப் பெறுகிறது. 234 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழகத்தில் பெண்கள் (3,19,39,112) ஆண்கள் (3,09,23,651), 7,192 மூன்றாம் பாலின மக்கள் என மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
கேரளாவில், 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று 40,771 வாக்குச் சாவடிகளில் நடைபெறும். மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,74,46,039 ஆகும், இதில் 1,32,83,724 ஆண்கள், 1,41,62,025 பெண்கள் மற்றும் 290 திருநங்கைகள் உள்ளனர். இந்த முறை மொத்தம் 957 வேட்பாளர்கள் உள்ளனர்.
புதுச்சேரியில் 955 பிரதான மற்றும் 606 துணை வாக்குச் சாவடிகள் உட்பட 1,558 வாக்குச் சாவடிகள் 635 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 30 தொகுதிகளுக்கான (Assembly Seats) வாக்குப்பதிவு நடக்கின்றது. இதில் 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்க மொத்தம் 10,04,507 வாக்காளர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்துவார்கள்.
காலை 9.11 மணி வரை சட்டசபை தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை:
கேரளா - 3.21%
தமிழ்நாடு - 0.24%
புதுச்சேரி - 0.38%
மேற்கு வங்கம் - 4.88%
அசாம் - 0.93%
ALSO READ: TN Assembly Election 2021 LIVE Updates:காலை 9 மணி வரை 13.80 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது
மறுபுறம், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. மூன்று மாவட்டங்களில் உள்ள 31 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கும். தெற்கு 24 பர்கானாக்கள், ஹவுரா மற்றும் ஹூக்லி ஆகிய இடங்களில் உள்ள இந்த 31 சட்டமன்றத் தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு மிகவும் முக்கியமானவை.
தெற்கு பர்கானாவின் 16 தொகுதிகள், ஹூக்லியின் 8 தொகுதிகள் மற்றும் ஹவுராவின் 7 தொகுதிகள் ஆகியவற்றில் வாக்குப்பதிவு நடைபெறும். இந்த தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 78,56,474 ஆகும். இதில் 4,049 சேவை வாக்காளர்கள் (Voters) உள்ளனர். இதில் 39,97,218 ஆண் வாக்காளர்கள் மற்றும் 38,59,013 பெண் வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 10,871 ஆகும். இதில் 8,480 பிரதான மற்றும் 2,391 துணைச் சாவடிகள் உள்ளன. மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 243 ஆகவும், வெளிநாட்டு வாக்காளர்கள் இருவரும் உள்ளனர். மூன்றாம் கட்ட வாக்கெடுப்பில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 13 பெண்கள் உட்பட 205 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதையும் தேர்தல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாமில், 126 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 40 இல் மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. 12 மாவட்டங்களில் இன்று நடக்கும் தேர்தல்கள் பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகின்றது.
நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று நடக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இது இரவு 7 மனி வரை நடைபெறும். கடைசி ஒரு மணிநேரம் கோவிட் -19 நேர்மறை நோயாளிகளுக்கு வாக்களிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR