இரட்டைஇலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புல்கித் குந்த்ரா கைது!

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷ் கூட்டாளி புல்கித் குந்த்ரா-வை கைது செய்துள்ளனர்.

Last Updated : Nov 22, 2017, 04:41 PM IST
இரட்டைஇலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புல்கித் குந்த்ரா கைது! title=

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் இன்று கைது செய்யப்பட்டார். இவர் டெல்லி திகார் ஜெயிலில் வைகப்பட்டுள்ளர். 

சுகேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க-வின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைதானார். பின்னர், அவர் ஜாமீனில் விடுதலையானார். பின்னர், கார் தரகரான சுகேஷ் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற சொகுசு கார்களை விற்பனை செய்துவந்தார். அவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. 

இதைதொடர்ந்து நவம்பர்-8 மற்றும் 10-ம் தேதிகளில் கர்நாடகா வருமான வரித்துறை அதிகாரிகள் கொச்சியில் சோதனை நடத்தினர். வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரின் இடத்தில் நவாஸ் சொகுசு கார்களை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வருமான வரித்துறையினர் 8-சொகுசு கார்கள் மற்றும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்யை கைப்பற்றினர்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தைப்  பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் சுகேஷின் கூட்டாளி புல்கித் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர். 

 

Trending News