ஆம்ஸ்ட்ராங் கொலை: ஸ்கெட்ச் போட்டு கொடுத்த அருள்... யார் இவர்? - பின்னணி என்ன?

Armstrong Murder Investigation: ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு "ஸ்கெட்ச்" போட்டது கைதான வழக்கறிஞர் அருள்தான் என்பது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Jul 12, 2024, 05:50 PM IST
  • 11 பேர் கைதாகி உள்ளனர்.
  • அதில் கைதான அருள் திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞராக உள்ளார்.
  • அருள் தான் ஆயுதங்களையும் வழங்கி உள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை: ஸ்கெட்ச் போட்டு கொடுத்த அருள்... யார் இவர்? - பின்னணி என்ன? title=

Armstrong Murder Investigation Latest Updates: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி இரவு ஒரு கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய பகுதியான பெரம்பூரில் மக்கள் நடமாட்டம் இருக்கும் வேளையில் இரவு 7.30 மணியளவில் இந்த கொலையை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொலை நடந்த பகுதிக்கு மிக அருகில்தான் செம்பீயம் காவல் நிலையும் அமைந்திருக்கிறது. 

இத்தனை இருந்தும் ஆம்ஸ்ட்ராங்கின் சொந்த ஏரியாவான பெரம்பூரில் புகுந்து, பக்கா ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியது. பெரம்பூரில் புதிதாக வீடுக்கட்டி வந்ததால் அருகில் அயனாவரத்தில் ஒரு வீட்டில் தற்போது குடியிருந்து வந்த அவர், வீடு கட்டும் பணிகளை மேற்பார்வையிட மாலையில் பெரம்பூர் வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதை கவனித்து கடந்த ஓரண்டுகளுக்கு மேலாக ஸ்கெட்ச் போட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளனர்.

ஆற்காடு சுரேஷ் கொலை...

இந்த வழக்கில் மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட மொத்தம் 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீசார் காவில் உள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை காணவும் இவர்கள் வெறும் ஏவிவிடப்பட்டவர்கள் எனவும் விசிக, மாயாவதி தொடங்கி பலரும் குற்றஞ்சாட்டினர்.

மேலும் படிக்க | ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு திமுகவின் பதில்... ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்!

இதில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் நோக்கிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தாலும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தன. திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் உள்பட பலரும் போலீசார் மீது தொடர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். போலீசார் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். 

ஸ்கெட்ச் போட்டது யார்?

இருப்பினும் மறுபுறம் போலீசார் விசாரணையும் தீவிரமாக நடந்துவருகிறது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கொலையாளிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல தகவல்களை போலீசார் விசாரணை மூலம் சேகரித்துள்ளனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு "ஸ்கெட்ச்" போட்டது கைதான வழக்கறிஞர் அருள்தான் என்பது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. 

கைதான அருள் திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞராக உள்ளார். அருள் அவரின் நண்பர்கள் சிலரின் உதவியோடு ஆம்ஸ்ட்ராங் செயல்பாட்டை முழுவதுமாக கண்காணித்து வந்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அருள் தான் கொலைக்கான ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும், பொன்னை பாலு என்கிற ஆற்காடு பாலு ஆட்கள் தான் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் போலீஸ் காவல் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

பின்னணியில் இருந்த அருள்

கொலைக்கான ஆயுதங்களை வாங்கி கொடுத்ததும் அருள்தான் என்பதும் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கொலை சம்பவம் முடிந்த பிறகு ஆயுதங்களை அருளிடம்தான் பொன்னை பாலு கூட்டாளிகள் ஒப்படைத்ததாகவும் தெரிய வந்துள்ளது. 

போலீஸ் காவலில் அருளிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஆயுதங்கள் எங்கு பதுக்கி வைத்திருக்கிறார் என விவரம் தெரிந்தது. திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகியோர் வீட்டில் தான் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தனர். இதை தெரிந்துகொண்ட போலீசார் அதனை கைப்பற்றி உள்ளனர். 

மேலும் வழக்கறிஞர் அருள் மற்றொரு வழக்கறிஞர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இந்த படுபயங்கர கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  அதனால் அருளிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம்... நீதிமன்றம் அனுமதி - அடக்கம் செய்யும் இடமும் உறுதியானது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News