TN Rain Alert: மக்களே குடையை ரெடியா வச்சுக்கோங்க.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

Written by - R Balaji | Last Updated : Jan 20, 2025, 02:47 PM IST
  • தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
  • ஒரிரு இடங்களில் வறண்ட வானிலை நிலவும்
  • வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: மக்களே குடையை ரெடியா வச்சுக்கோங்க.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!     title=

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜன.20) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நாளை மற்றும் ஜன.23ஆம் தேதி: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

ஜன.24 மற்றும் 25ஆம் தேதி: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

மேலும் படிங்க: அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கும் டிரம்ப்.. முதல் நாள் கையெழுத்து என்ன?

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இன்று (ஜன.20) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் 
இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை (ஜன.21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும்
இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கு எச்சரிக்கை 

தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இன்று முதல் 22ஆம் தேதி வரை இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிங்க: Shreya Saran pics: பிங்க் நிற உடையில் ஸ்ரேயா சரண்! கலக்கல் போட்டோஸ்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News