Gautham Menon Says He Did Not Direct ENPT : கோலிவுட் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து முக்கிய இயக்குனதாக இருப்பவர், கௌதம் வாசுதேவ் மேனன். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். இதில், இவர் பேசிய விஷயங்கள் சிலர் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
என்னை நோக்கி பாயும் தோட்டா:
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல படங்கள் எடுத்தவுடன் வெளியாவது இல்லை. சில பிரச்சினைகள் காரணமாக ரிலீஸ் தள்ளி போகலாம். அப்படி ரிலீஸ் சில வருடங்கள் தள்ளிப் போடப்பட்டு வெளியான படம், என்னை நோக்கி பாயும் தோட்டா. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நன்றாக இருந்ததால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புகள் எழுந்தது. ஆனால் வெளியானவுடன் நிலைமை தலைகீழானது.
கௌதம் மேனன் படம் என்று நம்பி போனவர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியதாக கூறப்படுகிறது. ரிலீஸ் தள்ளிப் போனதாலும், திரைக்கதையில் பெரிதாக வேகம் இல்லாததாலும் படம் பாக்ஸ் ஆபிஸில் குறைந்த வசூலையே பெற்றது. அது மட்டுமல்ல படத்திற்கு எழுந்த விமர்சனங்களும் பெரிதாக இல்லை. எனவே சில நாட்கள் தியேட்டரில் ஓடிய பிறகு இப்படம் ஓரங்கட்டப்பட்டது.
கௌதம் மேனனின் நேர்காணல்..
இயக்குனராக மட்டும் இருந்த கௌதம் வாசுதேவ் மேனன், சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகராகவும் அவதாரம் எடுத்தார். முதலில் தன் படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், பின்னர் வெவ்வேறு இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து, அவ்வப்போது இயக்குனர்களுடனான ரவுண்ட் டேபிள் சந்திப்பு அல்லது சிறப்பு நேர்காணல் ஆகியவற்றிலும் கலந்து கொள்கிறார். அப்படி ஒரு நேர்காணல் இவர் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
“அது என் படமே இல்ல..”
கௌதம் மேனன், நேர்காணலில் கலந்து கொண்ட போது தொகுப்பாளர் அவரிடம், “நீங்கள் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் எடுத்துக் கொண்டிருத்த சமயத்தில்..”என்று ஒரு கேள்வியை ஆரம்பித்தார். அதற்குள் இடைமறித்த கௌதம், “எந்த படம் அது? அப்படி ஒரு படத்தை நான் இயக்கவே இல்லை…அது இயக்கியது வேறு யாரோ” என்று சிரித்துக் கொண்டே கூறினார். பின்பு அந்தத் தொகுப்பாளரும், ஏதோ புரிந்தது போல சிரித்துக் கொண்டே “கௌதம் இப்படி பண்ணாதீங்க ப்ளீஸ்..” என கூறினார்.
தனுஷை மறைமுகமாக தாக்கினாரா?
நடிகர் தனுஷ், இதுவரை இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கத்தில் இன்னும் இரண்டு படங்கள் இந்த ஆண்டில் வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை தான் இயக்கவில்லை வேறு ஒருவர் இயக்கினார் என்று கௌதம் மேனன் சொன்னது ஒருவேளை தனுஷ் ஆக இருக்குமோ என்று ரசிகர்கள் சந்தேகத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதே போல தான் மாறன் படத்தையும் தனுஷ் இயக்கியதாகவும் இதை படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இணையத்தில் பதிவிட்டு பின்னர் போஸ்டை டெலிட் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ரசிகர்கள் யார் பக்கம்?
கெளதம் மேனன் இப்படி பேசியதில் இருந்து, ரசிகர்கள் இது குறித்து இணையத்தில் பேசிய வண்ணம் இருக்கின்றனர். ஒரு சிலர், “தனுஷ் இயக்கி வெற்றி பெற்ற படங்களுக்கு மட்டும் இயக்குநர்கள் கிரெடிட்ஸ் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், அவர் இயக்கி வெற்றி பெறாத படங்களுக்காக மட்டும் அவரை சாடுவது ஏன்?” என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர், “தனுஷ் இப்படியே பலரது கெரியரை காலி செய்துள்ளார்” என்றும் பேசி வருகின்றனர்.
மேலும் படிக்க | இயக்குனர் கௌதம் மேனனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மேலும் படிக்க | வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகை!! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ