முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் எனவும், வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் சனவரி 3 ஆம் தேதி(நாளை) முதல் சனவரி 10 ஆம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி ஆகும்.
இந்தநிலையில் திருவாரூர் தொகுதியில் நடிகர் விஷால் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுக்குறித்து நடிகர் விஷால் ஆலோசனை நடத்தி வருகிறார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.
ஏற்கனவே, முதல்வர் செல்லவி ஜெயலலிதா மறைந்தவுடன், அவரது தொகுதியான ஆர்.கே. நகருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது வேட்பு மனுவை நிராகரித்தது தேர்தல் கமிஷன். இதனால் விஷால் தேர்தல் ஆணையத்திடம் நியாயம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் நடிகர் விஷால் திருவாரூர் தேர்தலில் போட்டியிட ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து நடிகர் விஷாலுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்ப்படுமா? என வரும் நாட்களில் தான் தெரியும்.