Fishermen vs Sri Lanka: தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 8, 2022, 10:49 AM IST
Fishermen vs Sri Lanka: தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்த இலங்கை கடற்படை title=

ராமேஸ்வரம்: செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.

மீனவர்கள் பிடித்து கொண்டு செல்லப்பட்ட செய்தி தமிழக கியூ பிராஞ்ச் போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கியூ பிராஞ்ச் போலீசார் தெரிவித்தனர்.

‘‘நெடுந்தீவு அருகே அதிகாலை 2 மணியளவில் தமிழகம் (Tamil Nadu) ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் 3 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்’.

இது குறித்த மேலதிக தகவல்கள் கிடைத்ததும் தெரிவிக்கப்படும் என்று கியூ பிராஞ்ச் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நெடிந்தீவு, ஏராளமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய தளம் ஆகும். டெல்ஃப்ட் தீவு என்று பிரபலமாக அறியப்படும் நெடுந்தீவு, பிரபலமான சுற்றுலாத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | நீட் விலக்கு மசோதா விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் இன்று!

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்துக் கொண்டே இருப்பது கவலைகளை அதிகரிக்கிறது. கடந்த சில நாட்களில் 65 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் 100க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்களின் படகுகளையும் மீட்டுத்தர வேண்டும் என்றும் மீனவர்கள், மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் மேலும் 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ALSO READ | யூடியூப் பார்த்து போலி சாவியை உருவாக்கி மெகா கொள்ளை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News