பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும்!

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் முகவரி தேவைப்படும்.

Written by - RK Spark | Last Updated : Nov 23, 2024, 01:46 PM IST
    9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி.
    வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.
    உயர்கல்வி சேர்க்கைக்கு அத்தியாகும் தேவைப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும்! title=

2024-25 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதற்கான புதிய விதிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 10 முதல் டிசம்பர் 31க்குள் மின்னஞ்சல் முகவரி தொடங்குவது நடைமுறையில் இருக்கும். தமிழ்நாட்டின் மாநிலத்திற்கான திட்டமிடலில் பணிபுரியும் ஆர்த்தி இது தொடர்பாக சில செய்திகளைப் பகிர்ந்து உள்ளார். அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்குத் தயாராகும் வகையில் ஒரு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் முகவரி தேவைப்படுகிறது. ​​பல கல்லூரிகள் ஆன்லைன் மூலம் தான் சேர்க்கைகளை நடத்துகின்றனர். எனவே ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருப்பது மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொலைகார பாவிகள் - திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைப் பேச்சு

ஆசிரியர்களுக்கு உத்தரவு

அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024-25 ஆம் ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு மாணவரும் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்க ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள ஆசிரியர்கள் உதவ வேண்டும். இதனை தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கான மின்னஞ்சலை எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றிய வீடியோ இணைப்பு உள்ளது. அதன் மூலமும் மாணவர்கள் உதவி பெறலாம். எமிக்ஸ் (EMIS) இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் புதிய மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.

மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள் ஒரு மின்னஞ்சல் கணக்கை உருவாக்கியதும், அதை எவ்வாறு பயன்படுத்துவது, ஒருவருக்கு மின்னஞ்சலை அனுப்புவது எப்படி, யாராவது உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதனை எப்படி பார்ப்பது என்பதை பற்றி மாணவர்கள் ஆசிரியர்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் மின்னஞ்சலுக்கு உருவாக்கிய சிறப்பு கடவுச்சொல்லை (Password) நினைவில் வைத்து அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் மின்னஞ்சலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்பதை சொல்லி கொடுக்க வேண்டும். 

மாணவர்கள் அவர்களின் புதிய மின்னஞ்சல் முகவரியிலிருந்து, "எனக்கு புதிய மின்னஞ்சல் முகவரி கிடைத்தது" என்று cgtnss@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கிய இந்த செயல்முறைகள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு உதவ வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் இந்த செயல்முறை ஒவ்வொரு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முறையாக நடைபெறுவதை உறுதி வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் இவர்களுக்கு மட்டும் சிறப்புரிமை - அரசு முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News