10 மற்றும் +1, +2 பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் நடைபெற உள்ள 10, +1, +2 வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகளை இன்று  அரசுத் தேர்வு இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

Last Updated : Dec 15, 2017, 04:29 PM IST
10 மற்றும் +1, +2 பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு! title=

2018-ம் ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் 10-ம் மற்றும் +1, +2 வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வு ஆணைய இயக்குநர் வசுந்தராதேவி இன்று வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, 12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு மார்ச் 1-ம் தேதி துவங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும்.

11-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறும். 

10-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு மார்ச் 16-ம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெரும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இத்தேர்வுகள் வழக்கம் போல காலை 10 மணிக்குத் துவங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். 

Trending News