WPL 2023: இன்று முதல் மகளிர் ஐபிஎல்... எங்கு, எப்படி, எதில் பார்ப்பது?

WPL 2023: மகளிர் பிரீமியர் லீக் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், தொலைக்காட்சியில் நேரலையாக எதில் பார்ப்பது, ஓடிடியில் எதில் பார்ப்பது உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 4, 2023, 03:37 PM IST
  • இதில், மொத்தம் 5 அணிகள் பங்கேற்பு.
  • மொத்தம் 22 போட்டிகள் நடைபெற உள்ளது.
  • வரும் மார்ச் 26ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
WPL 2023: இன்று முதல் மகளிர் ஐபிஎல்... எங்கு, எப்படி, எதில் பார்ப்பது? title=

WPL 2023: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று தொடங்குகிறது. டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூரு, உத்தரப்பிரதேசம் என மொத்தம் 5 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. இதில், ஒரு அணி, மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். 

மொத்தம் 22 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. வரும் 26ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில், குஜராத் ஜெயின்ட்ஸ் அணிக்கு பெத் மூனே கேப்டனாக உள்ளார். அதேபோல், மும்பை அணிக்கு ஹர்மன்பிரீத் கௌர், பெங்களூரு அணிக்கு ஸ்மிருதி மந்தனா, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மெக் லான்னிங், உ.பி., வாரியர்ஸ் அணிக்கு அலிசா ஹீலி கேப்டனாக செயல்படுகிறார். 

இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி, நவி மும்பை டி.ஒய். பாட்டீல் அகாடமி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது. இப்போட்டியில், ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை, பெத் மூனே தலைமையிலான குஜராத் ஜெயின்ட்ஸ் அணி எதிர்கொள்கிறது. 

இந்த போட்டியின் டாஸ் 7 மணிக்கு என தெரிவிக்கப்பட்ட நிலையில், மாலை 7.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலைநிகழ்ச்சிகள் இன்று மாலை 5.30 மணியளவில் தொடங்குகிறது. 

மேலும் படிக்க | வார்னே கண்டெடுத்த இந்திய ஆல்ரவுண்டர் இவரா?

தொலைக்காட்சி நேரலை

ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் ரசிகர்கள் நேரடியாக போட்டிகளை காணலாம். 

ஓடிடி நேரலை

ஜியோ சினிமா ஆப் மூலம் மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் அனைவரையும் இலவசமாக நேரலையில் பார்க்கலாம். 

நடிகைகளின் நடனம்

மகளிர் பிரீமியர் லீக் கலைநிகழ்ச்சிகளில், பாலிவுட் நடிகைகள் கைரா அத்வானி, கிருத்தி சனான் ஆகியோரின் நடனமாட உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தேச பிளேயிங் லெவன்

குஜராத் ஜெயண்ட்ஸ்: பெத் மூனே (கேப்டன் & கீப்பர்), சபினேனி மேகனா, ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னர், தயாளன் ஹேமலதா, ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட், சினே ராணா, ஹர்லி காலா/அஷ்வனி குமாரி, மான்சி ஜோஷி/மோனிகா பட்டேல், தனுஜா கன்வார்

மும்பை இந்தியன்ஸ்: யாஸ்திகா பாட்டியா (கீப்பர்), ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), தாரா குஜ்ஜார், அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகர், அமன்ஜோத் கவுர், ஜிந்திமணி கலிதா, இஸ்ஸி வோங், சோனம் யாதவ்/சைகா இஷாக்

மேலும் படிக்க | IPL 2023: சேப்பாக்கத்தில் தோனி - மைதானத்துக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News