T20 World Cup: நல்லா ஆடினால் மட்டும் போதாது...இதுவும் வேண்டும்; ரோகித் படையை எச்சரிக்கும் கவாஸ்கர்

உலகக்கோப்பையை வெல்வதற்கு நன்றாக ஆடினால் மட்டும் போதாது, இந்திய அணிக்கு இதுவும் வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 15, 2022, 02:06 PM IST
  • ரோகித் சர்மாவுக்கு கவாஸ்கர் அறிவுரை
  • கோப்பையை வெல்ல அதிர்ஷ்டம் தேவை
T20 World Cup: நல்லா ஆடினால் மட்டும் போதாது...இதுவும் வேண்டும்; ரோகித் படையை எச்சரிக்கும் கவாஸ்கர் title=

முதல் முறையாக நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பையை வெற்றி பெற்ற இந்திய அணி, அதன்பிறகு நடைபெற்ற தொடர்களில் எல்லாம் தோல்வியை தழுவி வெளியேறியது. ஒவ்வொரு முறையும் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டபோதிலும், அதற்கு நேர்மாறாக படுதோல்வியை தழுவி, அடுத்த சுற்றுகளுக்கு கூட செல்லாமல் வெளியேறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. திறமையான மற்றும் உலகின் மிகச்சிறந்த வீரர்கள் பிளேயிங் லெவனில் இருந்தபோதும், இந்திய அணியின் 2வது முறையாக 20 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தாகம் கிட்டதட்ட 15 ஆண்டுகளாக தொடர்கிறது.

மேலும் படிக்க | தோனி செய்ததைபோல் ரோகித் செய்ய வேண்டும்; வாசிம் ஜபார் கேட்பது இதுதான்  

அந்த தாகத்தை இம்முறை தீர்த்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா. ஏற்கனவே ஆசிய கோப்பையில் அடி வாங்கிவிட்டதால், அந்த தவறுகளை உலகக்கோப்பையில் செய்துவிடக்கூடாது என்பது கவனமாக இருக்கிறார். அணி தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் மீண்டும் சர்ச்சையில் சிக்காத வகையில் பிளேயிங் லெவனை தேர்வு செய்ய வேண்டும் என நினைக்கும் ரோகித், ஐபில் கோப்பையை வென்று கொடுத்ததுபோல் நாட்டுக்காக 20 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஏனென்றால், இந்த தொடர் அவருக்கு கடைசி உலககோப்பை தொடராக கூட இருக்க வாய்ப்புகள் உள்ளன.

இது குறித்து பேசிய இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை தனக்கும் இருப்பதாக கூறியுள்ளார். அதேநேரத்தில் ரோகித் சர்மா தலைமையிலான அணிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை எனத் தெரிவித்துள்ளார். சிறிய அளவிலான அதிர்ஷடம் இருந்தால் கூட இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றுவிடும் எனத் தெரிவித்துள்ளார். இதேபோல், அணி தேர்வு குறித்து விமர்சிக்கக்கூடாது என தெரிவித்தார். ஒவ்வொரு தொடரில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதால், அது குறித்து கேள்வி எழுப்புவது சிறந்ததாக இருக்காது என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | விராட் கோலியை ஓய்வு பெற சொல்லுங்கள்! முன்னாள் வீரர் கருத்தால் சர்ச்சை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News