Rishabh Pant : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனை சில நிமிடங்களிலேயே ஸ்ரேயாஸ் அய்யரிடம் இருந்து ரிஷப் பந்த் வசம் வந்தது.
Rishabh Pant , Most Expensive Players in IPL : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன பிளேயர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் அய்யரிடம் இருந்து ரிஷப் பந்திடம் சில நிமிடங்களில் சென்றது. ஐபிஎலில் அதிக தொகைக்கு ஏலம் போன டாப் பிளேயர்கள் லிஸ்ட்
ஐபிஎல் 2025 தொடர் ஏலம் சவுதி அரேபயாவின் ஜெட்டா நகரில் தொடங்கியது. முதல் பிளேயராக ஸ்ரேயாஸ் அய்யர் பெயர் ஏலத்துக்கு வந்தது. அவரை ஏலம் எடுக்க கேகேஆர், டெல்லி, லக்னோ அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், கடைசியில் குதித்த பஞ்சாப் கிங்ஸ் அணி 26.27 கோடிக்கு ஸ்ரேயாஸ் அய்யரை ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன பிளேயராக மாறினார் அவர். ஆனால் இந்த சாதனை சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன பிளேயர் என்ற சாதனையை சில நிமிடங்களில் ரிஷப் பந்த் முறியடித்தார். அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 20 கோடி ரூபாய் வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முயற்சித்தது. ஆனால் ஒரே அடியாக 7 கோடி ரூபாய் அதிகரித்து இந்த விலைக்கு லக்னோ அணி ரிஷப் பந்தை வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன பிளேயர் என்ற சாதனையை படைத்தார்.
அடுத்தாக மிட்செல் ஸ்டார்க் கடந்த ஐபிஎல் தொடரில் 24 கோடி ரூபாய்க்கு ஏலம் போன அவர் இம்முறை 11.75 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கியுள்ளது. இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனை இன்னும் இவர் வசமே இருக்கிறது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் இருந்தார்.
பாட் கம்மின்ஸ் 20.50 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணி 2024ஏலத்தில் வாங்கியது. இப்போதைய நிலவரப்படி ஐபிஎல் வரலாற்றில் அதிகவிலைக்கு ஏலம் போன நான்காவது பிளேயர் இவர் தான். சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகவும் இவர் இருக்கிறார்.
சாம் கரன் 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த முறை வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் 5வது அதிகபட்ச விலைக்கு ஏலம் போன பிளேயர்கள் பட்டியலில் இருக்கிறார்.
யுஸ்வேந்திர சாஹல் 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது. ராயல் சேலஞ்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இவரை ஏலம் எடுக்க போட்டி போட்டன. இருப்பினும் பஞ்சாப் அணி சாஹலை ஏலம் எடுப்பதில் உறுதியாக இருந்து தட்டி தூக்கியது.
அடுத்ததாக அதிக விலைக்கு ஏலம் போன பிளேயர்கள் பட்டியில் உள்ளவர் அர்ஷ்தீப் சிங். 18 கோடி ரூபாய்க்கு இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்டிஎம் செய்தது. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பல அணிகள் இவரை ஏலம் எடுக்க போட்டி போட்டன.