டோனி வளர கங்குலியின் தியாகம்தான் காரணம்: சேவாக்

Last Updated : Oct 8, 2017, 04:39 PM IST
டோனி வளர கங்குலியின் தியாகம்தான் காரணம்: சேவாக்  title=

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக டோனி உயர்ந்ததற்கு முழு காரணம் கங்குலி செய்த தியாகம் மேலும் காட்டிய கருணையும் தான் என இந்திய கிர்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியிருப்பது தற்போது சர்ச்சையாக கிளம்பியது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சேவாக் அளித்த பேட்டியில் இந்திய அணியின் தேர்வு முறை, முன்னாள் வீரர்களின் செயற்பாடு என பலவற்றைப் பற்றி விரிவாக பேசினார். அப்போது டோனியின் தேர்வு குறித்து சேவாக் கூறியதாவது:-

டோனியை அணியில் சேர்த்ததும் அவர் அணியில் விளையாட வேண்டும் என அதிக ஆர்வம் காட்டியதும் கங்குலிதான். கங்குலி இந்த வாய்ப்பை அளிக்கவில்லை எனில் டோனி இவ்வளவு உயர்ந்து இருக்க முடியாது. 

டோனி அணியில் அறிமுகம் ஆகி சில நாட்களிலேயே நன்றாக விளையாடத் தொடங்கினார். இதையடுத்து அவரின் திறமையப் பார்த்த கங்குலி, டோனிக்காக அணியில் பல மாற்றங்களை செய்ய முடிவெடுத்தார். அணியின் பின்வரிசையில் ஆடிக் கொண்டிருந்த அவரை முன் வரிசைக்கு மாற்றியதும் கங்குலிதான்.

2005-ம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து கங்குலி வெளியேறிய பின் டிராவிட் கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போது அவர் இந்திய அணியில் செய்த மாற்றத்தை யாராலும் மறக்க முடியாது. டிராவிட்டின் கேப்டன் பதவி டோனிக்கு வழங்கப்பட்டது. டிராவிட்டும், கங்குலியும் அப்படி தியாகத்துடன் விட்டுக் கொடுக்கவில்லை எனில் டோனியால் கேப்டன் ஆகியிருக்க முடியாது. 

இவ்வாறு சேவாக் கூறினார். 

Trending News