"ஈகோவால் சஞ்சு சாம்சனின் எதிர்காலத்தை சிதைத்து உள்ளீர்கள்" - சசி தரூர் எம்பி கடும் சாடல்!

Shashi Tharoor About Sanju Samson: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறாத நிலையில், காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.   

Written by - R Balaji | Last Updated : Jan 19, 2025, 03:37 PM IST
  • சாம்பியன்ஸ் டிராபியில் சஞ்சு சாம்சன் தேர்வாகவில்லை
  • சசி தரூர் எம்பி கடும் சாடல்
  • கேரள கிரிக்கெட் சங்கம்
"ஈகோவால் சஞ்சு சாம்சனின் எதிர்காலத்தை சிதைத்து உள்ளீர்கள்" - சசி தரூர் எம்பி கடும் சாடல்!  title=

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் பிப்.19ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் இம்முறை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. 

ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல விரும்பாத நிலையில், இந்திய விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இத்தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் அறிவித்து வருகிறது. 

சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வாகத சஞ்சு சாம்சன்

அந்த வகையில் நேற்று(ஜன.18) இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) இந்திய அணியை அறிவித்தது. அந்த அணியில் ரோகித் சர்மா கேப்டனாகவும் சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்‌ஷதீப் சிங், ரவீந்தர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். 

கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் இவர்களில் ஒருவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. காரணம் கடந்த நவம்பர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் 2 சதங்களை விளாசினார். அதோடு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சதம் விளாசினார். இப்படி ஃபார்மின் உச்சியில் இருக்கும் சாம்சனை பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்யவில்லை. 

மேலும் படிங்க: சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்: கைதானவரின் திடுக்கிடும் பின்னணி

கடுமையாக சாடிய சசி தரூர் எம்பி

இந்த நிலையில்தான், சாம்பியன்ஸ் டிராபில் சஞ்சு சாம்சனை எடுக்காதது குறித்து திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடுமையாக விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக சசி தரூர் எம்பி தனது எக்ஸ் பக்கத்தில், கேரள கிரிக்கெட் சங்கம் மற்றும் சஞ்சு சாம்சன் என்ற வீரர் இடையேயான வருத்தமான கதை. சையத் முஷ்டாக் டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபி இடையிலான பயிற்சி முகாமில் கலந்து கொள்ள மாட்டேன் என சஞ்சு சாம்சன் முன்கூட்டியே கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும் விஜய் ஹசாரே டிராபிக்கான கேரள அணியிலிருந்து நீக்கப்பட்டதோடு, தற்போது அவர் இந்திய அணியிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். 

இவர் விஜய் ஹசாரேவில் 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்திய அணிக்கு விளையாடி 56.66 சராசரியை வைத்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சதத்தையும் விளாசியுள்ளார். தற்போது அவரின் எதிர்காலத்தை கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஈகோ முற்றிலுமாக சிதைத்துள்ளது. அதேபோல் இந்த ஈகோவால் கேரள அணி விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதிக்குக் கூட தகுதி பெறாமல் ஆகிவிட்டது. இது கவலையாக இல்லையா? எனக் கடுமையாக சாடியுள்ளார். 

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி | கவுதம் கம்பீர் பேச்சை கேட்காத ரோகித், அஜித் அகர்கர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News