டென்மார்க் ஓபன் இறுதி போட்டியில் சீன வீராங்கனை தாய் சூ யிங்-கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார் சாய்னா நேவால்!
டென்மார்க் நகரில் நடைப்பெற்று வரும் மகளிருக்கான ஓபன் பேட்மிண்டன் தொடர் இறுதி போட்டியில் சீன வீராங்கனை தாய் சூ யிங்-கிடம் 13-21, 21-13, 6-21 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இத்தொடரின் இறுதி போட்டியில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் உலக தரவரிசையில் 1-வது இடத்தில் இருக்கும் தாய் சூ யிங் உடன் பலபறிட்சை மேற்கொண்டார்.
Our girl Saina Nehwal on the victory podium with the Silver medal.
Full marks for the effort today. More power to you. #DenmarkOpenSuper750 pic.twitter.com/Xb57tTMKG6— India_AllSports (@India_AllSports) October 21, 2018
பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 13-21, 21-13, 6-2 என்ற செட் கணக்கில் சாய்னா-வை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் தாய் சூ யிங்.
இதற்கு முன்னதாக இவர்கள் இருவருக்கும் இடையே நடைப்பெற்ற போட்டிகளில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைப்பெற்ற போட்டியில் சாய்னா வெற்றி பெற்றார். இதனையடுத்து நடைப்பெற்ற 11 போட்டிகளில் தாய் சூ யிங் மட்டுமே வெற்றியை தக்கவைத்து வருகின்றார். குறிப்பாக இந்த ஆண்டில் நடைப்பெற்ற 4 போட்டிகளிலும் சாய்னா தோல்வியை தழுவியுள்ளார்.