ஐபிஎல் 2022-ன் 50வது போட்டியான இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியில் லீடிங் விக்கெட் டேக்கர் நடராஜன் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
Action Time
Follow the match https://t.co/0T96z8GzHj #TATAIPL | #DCvSRH pic.twitter.com/rgqsZWwLSA
— IndianPremierLeague (@IPL) May 5, 2022
மேலும் படிக்க | சிஎஸ்கே தோல்விக்கு தோனி காரணமா? இவரை எடுக்காதது ஏன்?
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லி வீரர் மன்தீப் ரன்கள் ஏதுமின்றி புவனேஸ்வர் பந்தில் வெளியேறினார். பின்பு இறங்கிய மார்ஷ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 37 ரன்களில் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்பு ஜோடி சேர்ந்த வார்னர் மற்றும் பந்த் அதிரடியாக ஆடினர். வழக்கம் போல தனது அதிரடி பேட்டிங்கில் பந்த் 16 பந்துகளில் 3 சிஸ்சர்கள் உட்பட 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய ரோவ்மேன் பவல் சன்ரைசர்ஸ் பவுலர்களை வெளுத்து வாங்கினார். வெறும் 35 பந்துகளில் 6 சிஸ்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 67 ரன்களை குவித்தார். மறுபுறம் வார்னர் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 58 பந்துகளில் 92 ரன்களை குவித்த வார்னர் கடைசி வரை அவுட் ஆகமாலும் இருந்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 207 ரன்களை குவித்தது.
The stunning batting show from @davidwarner31 (92*) & Rovman Powell (67*) powers @DelhiCapitals to 207/3.
The @SunRisers chase to begin soon.
Scorecard https://t.co/0T96z8GzHj#TATAIPL | #DCvSRH pic.twitter.com/ppoNlXjQFd
— IndianPremierLeague (@IPL) May 5, 2022
சிறிது கடின இலக்கை எதிர்த்து ஆடிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 7 ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் 4 ரன்களிலும் வெளியேறினர். திரிபாதி 22 ரன்களில் வெளியேற 37 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது சன்ரைசர்ஸ். பின்பு ஜோடி சேர்ந்த மார்க்ரம் மற்றும் பூரண் அதிரடி காட்டினர். சிறிது நேரம் மைதானத்தில் சிஸ்சர் மழை பொழிந்தது. 6 ஓவர்களில் 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பூரண் காட்டிய அதிரடியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நிலைக்கு டெல்லி ரசிகர்கள் இருந்தனர். எதிர்பாராத விதமாக பூரண் அவுட்டாக போட்டி டெல்லி பக்கம் திரும்பியது. இந்த போட்டியில் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
th win for @RishabhPant17 & Co. in the #TATAIPL 2022!
The @DelhiCapitals beat #SRH by 21 runs & return to winning ways. #DCvSRH
Scorecardhttps://t.co/0T96z8GzHj pic.twitter.com/uqHvqJPu2v
— IndianPremierLeague (@IPL) May 5, 2022
மேலும் படிக்க | மதம்மாற கட்டாயப்படுத்தியதாக ஷாகித் அப்ரிடி மீது சரமாரி குற்றச்சாட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR