ஐபிஎல்-ல் இன்று: முன்னாள் கேப்டன் vs வருங்கால கேப்டன்!

ஐபிஎல் 2021ல் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

Written by - RK Spark | Last Updated : Oct 4, 2021, 12:56 PM IST
  • பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே இரண்டு அணிகளும் தகுதி பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் தங்களது பலத்தினை நிரூபிக்க விளையாட உள்ளன.
  • தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்த சென்னை அணி, ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த கடைசி போட்டியில் 190 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது.
ஐபிஎல்-ல் இன்று: முன்னாள் கேப்டன் vs வருங்கால கேப்டன்! title=

ஐபிஎல் 2021 போட்டிகள் முடியும் தருவாய்க்கு வந்து விட்டன.  3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் மீதமுள்ள ஒரு இடத்திற்கு 4 அணிகள் போட்டி போட்டு வருகின்றன.  இந்த நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன.

பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே இரண்டு அணிகளும் தகுதி பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் தங்களது பலத்தினை நிரூபிக்க விளையாட உள்ளன.  இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி அணி.  அதனால் இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற அதிகமாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

pant

தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்த சென்னை அணி, ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த கடைசி போட்டியில் 190 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது.  டெல்லி அணியின் பறிச்சியாளராக ரிக்கி பாண்டிங் வந்ததில் இருந்து சிறப்பாக ஆடி வருகிறது.  'இளம் கன்று பயம் அறியாது' என்பது போல இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணி மற்ற அணிகளை பந்தாடி வருகிறது.  ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி 12 போட்டிகளில் 3ல் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. 

dhoni

சென்னை அணியும் 12 போட்டிகளில் விளையாடி 3ல் மட்டுமே தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.  இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெரும் பட்சத்தில் முதல் இடத்தை பிடிக்கும்.  சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங் பலமாக இருந்தாலும், பவுலிங் மோசமாக உள்ளது.  இன்றைய போட்டியில் அதனை சரி செய்து சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.  இரண்டாவது முறையாக சென்னை அணியை தோற்கடிக்க டெல்லி அணி தயாராக உள்ளது.  டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டிற்கு இன்று பிறந்த நாள் என்பதால் உற்சாகத்துடன் களம் இறங்க உள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News