ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது.
முன்னதாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் மார்ச் 2 ஆம் தேதி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு விளையாடியது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மார்ச் 5 ஆம் தேதி ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. இதில் இந்தியா 48.2-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 250 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 49.3-வது பந்தில் 242 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்த இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில், நாளை 3_வது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள JSCA ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. நாளை எம்.எஸ். தோனி சொந்த மண்ணில் விளையாட உள்ளார். இதனால் அவர் மீதனா எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.