இந்தியன் பிரீமியர் லீக் (IPL), எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் மற்றொரு பம்பர் ஏலத்திற்கு தயாராகி வருகிறது. 215 சர்வதேச வீரர்களுடன் சேர்த்து சுமார் 971 பேர் இந்த ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர்.
IPL 2020 ஏலத்தில் 200-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் இடம்பெற்று இருப்பது, இந்த IPL தொடர் நடைப்பெற்ற தொடர்களில் மிகப்பெரிய தொடராக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து BCCI வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடுகையில்., VIVO IPL வீரர்கள் பதிவு ஆனது கடந்த நவம்பர் 30-ஆம் தேதி முடிவடைந்தது. இதுவரை 971 வீரர்கள் (713 இந்திய மற்றும் 258 வெளிநாட்டு வீரர்கள்) VIVO IPL 2020 ஏலத்தில் ஒரு பகுதியாக கையெழுத்திட்டுள்ளனர். இது டிசம்பர் 19, 2019 அன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது,” என குறிப்பிட்டுள்ளது.
ஏலம் தொடர்பாக தெரிந்துக்கொள்ள வேண்டிய சில தகவல்கள்...
- பதிவு செய்த 971 வீரர்களில் 73 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- இந்திய கிரிக்கெட் அணியின் சர்வேத போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 19 பேர்.
- சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத இந்தியர்கள் 634 பேர்.
- குறைந்தது 1 IPL போட்டியில் விளையாடி (ம) சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத இந்திய வீரர்கள் 60 பேர்.
- சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் 160 பேர்
- சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்கள் 60 பேர்.
- இணை வீரர்கள் இரண்டு பேர்.
குறித்த இந்த ஏலம் ஆனது மீண்டும் ஹக் எட்மீட்ஸ் நடத்தப்படுகிறது. 258 சர்வதேச வீரர்களில், ஆஸ்திரேலியர்கள் 55 கிரிக்கெட் வீரர்களுடன் முன்னிலையிலும், தென்னாப்பிரிக்கா 54 வீரர்களுடன் இடம்பெற்றுள்ளது. பட்டியலில் 39 இலங்கை வீரர்கள், மேற்கு இந்தியர்களைச் சேர்ந்த 34 பேர், நியூசிலாந்திலிருந்து 24 பேர், இங்கிலாந்தில் இருந்து 22 பேர் மற்றும் 19 பேர் ஆப்கானிஸ்தான் வீரர்களும் இடம்பெற்றள்ளனர்.