மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இரு அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி கௌஹாத்தி மைதானத்தில் நேற்று துவங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய கிரண் பவுள் 51(39) ரன்கள் என அணிக்கு பலம் சேர்த்தார். இவரை தொடர்ந்து வந்த ஷாய் ஹோப் 32(51), ஷிம்ராம் ஹெட்மையர் 106(78) என அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் மட்டும் இழந்து 322 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட், மொகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா தலை 2 விக்கெட், கலீல் அகமது 1 விக்கெட் எடுத்தனர்.
இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் விரைவில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கோலி மற்றும் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரும் சதம் அடித்து அசத்தினர். 140(107) ரன்களுக்கு வெளியேறினார் விராட் கோலி. பின்னர் ராயுடு களமிறங்கினர். இறுதியில் இந்திய அணி 47 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.