2021 டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்தது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி படு மோசமான தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியே இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழப்பதற்கு காரணமாக அமைந்தது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் அரையிறுதியில் இந்தியாவை தோற்கடித்தது நியூசிலாந்து. அதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணியை தோற்கடித்தது.
ALSO READ IND vs NZ டி20 தொடர் முழு அட்டவணை போட்டி நேரம் நாள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்
தற்போது நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது. உலக கோப்பை பைனல் போட்டிகள் முடிந்த மூன்றாவது நாளிலேயே நியூசிலாந்து அணி தனது அடுத்தப் போட்டியில் விளையாட உள்ளது. நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக ஓய்வு எடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார். இந்திய அணியிலும் பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகி உள்ளதால் ரோஹித் சர்மா தலைமையில் இன்று களம் இறங்குகிறது இந்திய அணி.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பல வீரர்கள் தற்போது இந்திய அணியில் விளையாட உள்ளனர். நியூசிலாந்து அணி டிம் சவுதியின் தலைமையில் களமிறங்குகிறது. ஜெய்ப்பூரில் நடைபெறும் இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி: ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் , கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட்
நியூசிலாந்து அணி: டிம் சீஃபர்ட், டிம் சவுத்தி , மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், கைல் ஜேமிசன், ட்ரென்ட் போல்ட், இஷ்னேட், ஆடம்.
ALSO READ Viral Video: புதிய தொடக்கம்! பயற்சியில் இறங்கிய ரோஹித்-ராகுல் கூட்டணி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR