கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தற்போதைய புதிய வகைக்கு (B.1.1.529) ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இஸ்ரேல், போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளிலும், இந்த வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) இது மிகவும் கவலைக்குரிய மாறுபாடு என்று கூறியுள்ளது.
ஒமிக்ரான் புதிய வகை கொரோனா வைரஸ் (Omicron) இதுவரை 17 நாடுகளில் (தென்ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து, இஸ்ரேல், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, கனடா, பிரான்சு, ஸ்பெயின், போர்ச்சுக்கல், டென்மார்க், செக் குடியரசு) பரவி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவிய 17 நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
ALSO READ | Omicron மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?
இந்த நிலையில் தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் (India tour of South Africa) சுற்றுப் பயணம் செய்து விளையாட உள்ளது. 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. ஆனால், இந்த தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா வைரஸின் புதிய வேரியண்டான ஓமிக்ரான் என்ற புதிய மாதிரி வைரஸ் உலகளவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இருந்த வேரியண்டுகளைக் காட்டிலும் மிக வேகமாக பரவும் இந்த வைரஸ், மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியினர் அந்நாட்டில் இம்மாதம் 17 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
ALSO READ | Health Alert! புதிய கோவிட் மாறுபாடு Omicron பரவுகிறது! பயணக் கட்டுப்பாடுகள் அமல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR