ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. மேலும், இன்று மூன்று போட்டிகள் திட்டமிடப்பட்டிருந்தன. அதன்படி, அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கிய தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து போட்டியில், நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம், இரண்டாவது பிரிவில் முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மறுப்புறம், நெதர்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறினாலும், தென்னாப்பிரிக்க அணியையும் தொடரில் இருந்து வெளியேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#TeamIndia | #T20WorldCup pic.twitter.com/4avLw1VgOT
— BCCI (@BCCI) November 6, 2022
தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், 5 புள்ளிகளுடன் தொடரை முடித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேச அணிகள் 4 புள்ளிகளுடன் இன்றைய ஆட்டத்தை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும்.
India go through!
The Netherlands'thrilling victory over South Africa means India have officially qualified for the semi-finals pic.twitter.com/RH7380jgAn
— ICC (@ICC) November 6, 2022
போட்டி மழையால் முழுமையாக தடைப்பட்டால் ஒழிய, தென்னாப்பிரிக்கா அடுத்த சுற்றுக்கு தகுதிபெற வாய்ப்பில்லை என தெரிகிறது. இந்திய அணி, ஜிம்பாப்வே அணியுடனான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், முதலிடத்தில் நீடிக்கும். எனவே, இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் மோத அதிக வாய்ப்புள்ளது.
What an incredible game of cricket!
The Netherlands shock the world to register a brilliant win against South Africa #T20WorldCup | #SAvNEDhttps://t.co/hoPWqCwJ6A
— ICC (@ICC) November 6, 2022
தற்போது, அதே அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் - வங்கேதசம் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில், வெற்றி பெறும் அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியை சந்திக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | வங்கதேச வீரர்கள் உணவருந்தியபோது விராட் கோலி கொடுத்த அதிர்ச்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ