இங்கிலாந்து - இந்தியா முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பேட்டிங்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. ராஜ்கோட் மைதானத்தில் டெஸ்ட் போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் மற்றும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில்  விளையாடுகிறது. தொடக்க வீரராக 19 வயது ஹசீப் ஹமீத் அறிமுகமாக உள்ளதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Last Updated : Nov 9, 2016, 10:07 AM IST
இங்கிலாந்து - இந்தியா முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பேட்டிங் title=

ராஜ்கோட்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. ராஜ்கோட் மைதானத்தில் டெஸ்ட் போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் மற்றும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில்  விளையாடுகிறது. தொடக்க வீரராக 19 வயது ஹசீப் ஹமீத் அறிமுகமாக உள்ளதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

இந்தியா அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), முரளி விஜய், கவுதம் கம்பீர், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, விருத்திமான் சாஹா, ரவீந்திர  ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், அமித் மிஷ்ரா, ஜெயந்த் யாதவ், கருண் நாயர், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி.

இங்கிலாந்து அணி: அலஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜாபர் அன்சாரி, ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், கேரி பேலன்ஸ், கேரத் பேட்டி,  ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஸ்டீவன் பின், ஹசீப் ஹமீத், அடில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்,  கிறிஸ் வோக்ஸ். 

Trending News