ரிஷப் பண்ட் தேவையே இல்லை... இது அதிரடி பிளேயிங் லெவன் - ஆடிப்போன ரசிகர்கள்!

Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Jun 1, 2024, 03:03 PM IST
  • நாளை முதல் டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது.
  • இன்று இந்தியா - வங்கதேசம் பயிற்சி போட்டியாகும்.
  • இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பல்வேறு கணிப்புகள் உள்ளன.
ரிஷப் பண்ட் தேவையே இல்லை... இது அதிரடி பிளேயிங் லெவன் - ஆடிப்போன ரசிகர்கள்! title=

Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) இந்திய நேரப்படி நாளை (ஜூன் 2) தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முதல் போட்டி அமெரிக்காவில் நடைபெறும் நிலையில், தொடரை நடத்தும் அமெரிக்க அணி, கனடாவை சந்திக்கிறது. இந்த போட்டி அமெரிக்க உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இருப்பினும், இந்திய அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகள் இந்திய ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் அமெரிக்காவில் மதிய வேளையில் நடைபெறுகிறது. இதனால், இந்திய நேரப்படி இரவு 8.30 மணியளவில் போட்டியை காணலாம். 

மேலும், இந்திய ரசிகர்கள் இந்த டி20 உலகக் கோப்பை தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். காரணம் 2007ஆம் ஆண்டில் நடந்த முதல் டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றதோடு சரி, அதன் பின் ஒருமுறை பைனலில் தோல்வி, 2 முறை அரையிறுதியில் தோல்வி என தொடர் தோல்விகளால் இந்திய அணி துவண்டுள்ளது. எனவே, இந்திய அணி மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறது எனலாம். இதனால், சரியான பிளேயிங் லெவனை தேர்வு செய்து அதில் சரியான காம்பினேஷனை அமைத்து இந்திய அணி தனது வெற்றி பயணத்தை தொடங்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகும். 

ஷாக் அளித்த ஹர்பஜன் சிங்

அந்த வகையில், இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் (IND vs BAN Warmup Match) நியூயார்க் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியிலும் நீங்கள் நேரலையில் காணலாம். இன்றைய போட்டி நிச்சயம் இந்திய அணிக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். டி20 போட்டியை பொறுத்தவரை வங்கதேசம் அணி கத்துக்குட்டி அணியல்ல... எனவே இந்தியா அவர்களை எப்படி எதிர்கொள்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | 1 கோப்பையும், எக்கச்சக்க தோல்விகளும்... டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பிளாஷ்பேக்!

இப்படி இந்தியாவின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் (Team India Playing Eleven) குறித்து பலரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களின் பிளேயிங் லெவன் கணிப்பை தெரிவித்து வரும் வேளையில், இந்திய அணியின் (Team India) மூத்த வீரரும், 2007ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஹர்பஜன் சிங், தற்போது இந்திய அணியின் தனது பிளேயிங் லெவனை கூறியுள்ளார். இதில் பலருக்கும் ஷாக் அளிக்கும் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். 

இந்திய அணியின் பிளேயிங் லெவன்

ஹர்பஜன் சிங் (Harbajan Singh) தற்போது வர்ணனையாளராக உள்ள நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் அவர் பேசியதாவது, "என்னைப் பொறுத்தவரை, ரோஹித் சர்மா ஓப்பனிங்கில் வருவார், அவருக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடியாக இருப்பார். விராட் கோலி 3ஆவது இடத்தில் விளையாடுவார். அதன் பிறகு சூர்யகுமார் யாதவ் வருவார். சஞ்சு சாம்சன் நல்ல ஃபார்மில் இருப்பதால் நீங்கள் விளையாட வேண்டும் என்று நான் கூறுவேன்

ஹர்திக் பாண்டியா 6வது இடத்தில் வருவார். பிறகு நீங்கள் ஜடேஜாவை 7ஆவது இடத்தில் இறக்கலாம். அவர் ஒரு ஆல்ரவுண்டர் வேறு. எனது கருத்துப்படி யுஸ்வேந்திர சாஹலை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் நீங்கள் விளையாடியாக வேண்டும்.

மாற்றம் செய்தால்...! 

இதை மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே நினைக்கிறேன். நீங்கள் ஒரு ஸ்பின்னர் வேண்டுமானால் கழட்டி விட்டுவிட்டு சிவம் துபேவைக் கொண்டு வரலாம். அது சூழலைப் பொறுத்தது. மைதான சூழல், ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தால் உங்களுக்கு இரண்டு ஸ்பின்னர்கள் தேவைப்படும். ஒரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் (சஹால்) மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் போதும். 

மைதானத்தில் நிறைய சுழல் கிடைத்தால், சஹால் ஜடேஜாவுடன் குல்தீப் யாதவையும் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளரைக் குறைத்தும் கொள்ளலாம். அப்போது ஹர்திக் பாண்டியா பந்து வீச வேண்டும். அவர் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் வீச வேண்டும்" என்றார். குறிப்பாக, ஹர்பஜன் சிங் பிளேயிங் லெவனில் ரிஷப் பண்ட், அக்சர் படேல், குல்தீப், தூபே ஆகியோருக்கு இடமில்லை. 

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை: 2007 டூ 2022 - தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News