கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா (Diego Maradona) மாரடைப்பு காரணமாக நவம்பர் 25ஆம் தேதியன்று (புதன்கிழமை) காலமானார்.
60 வயதான Diego Maradonaவுக்கு, ஒரு சவ்வுக்கும் அவரது மூளைக்கும் இடையில் ரத்தத்தை சேர்க்கும் subdural hematoma பிரச்சனைக்காக அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. உலகில் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மரடோனா (Diego Maradona), 1986 ஆம் ஆண்டில் அர்ஜென்டினா உலகக் கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார்.
அவர் போகா ஜூனியர்ஸ் (Boca Juniors), நெப்போலி (Napoli), பார்சிலோனா ( Barcelona) ஆகிய கால்பந்து கிளப்களுக்காக விளையாடியுள்ளார். அற்புதமான மரடோனாவின் திறமைகளுக்கு கால்பந்து ரசிகர்கல் அனைவரும் அடிமை என்றே சொல்லலாம்.
1986 போட்டிகளில் இருந்து இங்கிலாந்தை வெளியேற்றியதற்கும் மரடோனா காரணம். அப்போதில் இருந்து 'Hand of God' என்ற சொல்லாடல் மிகவும் பிரபலமானது. மரடோனா நவம்பர் 3ஆம் தேதியன்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 60 வயதான மரடோனா, அர்ஜென்டினாவின் லா பிளாட்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார்.
கொரோனா பாதிப்புக்காக மரடோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. உடல் பாதிப்புகள் எதுவும் இல்லை என மரடோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் முன்னதாக கூறியிருந்தார். இது கால்பந்து ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு பலரும் இரங்கல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் செளராவ் கங்குலி உருக்கமான அஞ்சலியை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ”உங்களுக்காவே கால்பந்தாட்ட விளையாட்டை பார்க்கத் தொடங்கினேன்... என்னுடைய ஹீரோ இப்போது இல்லை.. அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என கங்குலி தனது வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார். தற்போது #RIP maradona என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
My hero no more ..my mad genius rest in peace ..I watched football for you.. pic.twitter.com/JhqFffD2vr
— Sourav Ganguly (@SGanguly99) November 25, 2020
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் Sledging செய்வார்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையானசெய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR