IND vs ENG: நடப்பு உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) 29ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணி லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், டாஸ் (IND vs ENG Toss Update) வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்மூலம், இந்தியா முதல் பேட்டிங் செய்கிறது. இந்தியா நடப்பு தொடரில் முதன் முதலில் இந்த போட்டியில் தான் முதலில் பேட்டிங் செய்கிறது. இரண்டு அணியின் பிளேயிங் லெவனிலும் (IND vs ENG Playing XI) எந்த மாற்றமும் இல்லை.
இங்கிலாந்தின் திட்டம் என்ன?
டாஸின் போது இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் (Jos Butler) கூறுகையில்,"இன்று நாங்கள் முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளோம். குறிப்பிட்ட காரணம் என்று எதுவும் இல்லை, இது ஒரு தைரியமான முடிவாக எடுத்துள்ளோம். இது ஒரு சிறந்த சந்தர்ப்பம், இன்று நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருகிறோம்.
இன்று, நாங்கள் ஒரு நல்ல விளையாட்டை விளையாட விரும்புகிறோம். எங்களுக்கு நாங்களே நியாயம் செய்யவில்லை. இந்திய அணிக்கு எதிராக மைதானம் நிரம்பிய பார்வையாளர்களுடன் விளையாடுவது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். நாங்கள் அதே பிளேயிங் லெவனுடன் செல்கிறோம்" என்றார்.
Toss and Team Update
England win the toss and elect to bowl in Lucknow.
A look at #TeamIndia's Playing XI
Follow the match https://t.co/etXYwuCQKP#CWC23 | #MenInBlue | #INDvENG pic.twitter.com/oIo82skT3v
— BCCI (@BCCI) October 29, 2023
'முதல் பேட்டிங் எடுக்கவே நினைத்தோம்'
மேலும், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) கூறுகையில்,"நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம், இரண்டாவது பேட்டிங் செய்ய எங்களுக்கு பல நல்ல போட்டிகள் கிடைத்தது. இது ஒரு நல்ல பிட்ச் போல் தெரிகிறது, இது ஒரு புதிய ஆடுகளம், இப்போதுதான் முழுமையாக மாற்றப்பட்டது. இந்த ஆடுகளம் 100 ஓவர்கள் வரை சிறப்பாக இருந்தது.
அப்படி நினைப்பது மிகவும் முக்கியம். ஆனால் இரண்டு புள்ளிகளைப் பெறுவது முக்கியம். நாங்கள் சில நல்ல கிரிக்கெட் விளையாடினோம். ஓய்வு எடுப்பது எப்போதும் நன்றான ஒன்று. மீண்டும் இங்கு வந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன்தான் நாங்கள் விளையாடுகிறோம்" என்றார். ரோஹித் சர்மா கேப்டனாக 100ஆவது சர்வதேச போட்டியில் இன்று விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
பிளேயிங் லெவன்
இந்தியா: ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ