பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடர், கடந்த நவ. 20ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், நாளை நிறைவடைய உள்ளது.
அந்த வகையில், அரையிறுதியில் தோல்வியடைந்த குரோஷியா, மொராக்கோ அணிகள் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இன்று மோதின. காலிஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி, இந்திய நேரப்படி நாளை இரவு 8.30 மணிக்கு தொடங்கியது.
ஆட்டம் தொடங்கி 7ஆவது நிமிடத்தில் குரோஷியாவின் ஜோஸ்கோ க்வார்டியோல் கோல் அடித்து மிரட்ட, அதற்கு பதிலடியாக மொராக்கோவின் அக்ரஃப் தாரி 9ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆரம்பமே அமர்களமாக இருந்த நிலையில், இரு அணிகள் அடுத்தடுத்து அதிரடி வெளிக்காட்டினர். அந்த வகையில், ஆட்டத்தின் முதல் பாதி முடியும் தருவாயில், அதாவது 42ஆவது நிமிடத்தில் குரோஷியாவின் மிஸ்லாவ் ஓர்சிக் அபாரமாக கோல் அடித்து குரோஷியா முன்னிலை பெற வைத்தார்.
— FIFA World Cup (@FIFAWorldCup) December 17, 2022
இதனால், முதல் பாதியை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையுடன் நிறைவு செய்த குரோஷியா இரண்டாவது பாதியில், தனது ஆதிக்கத்தை தக்கவைத்தது. தடுப்பாட்டத்தையும், கோல் முயற்சியையும் ஒருங்கே செயலாற்றியதால், மொராக்கோ அணியால் அடுத்து கோல் போட இயலவில்லை. இருப்பினும், கோல் கம்பம் வரை பல முயற்சிகள் மேற்கொண்ட மொராக்கோ வீரர்களுக்கு கடைசிவரை ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி நொடிவரை பரபரப்புடன் சென்ற போட்டியில், குரோஷியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
— FIFA World Cup (@FIFAWorldCup) December 17, 2022
அதன்மூலம், குரோஷியா அணி 2022 கத்தார் பிபா உலகக்கோப்பையை மூன்றாவது இடத்துடன் நிறைவுசெய்தது. கடந்த உலகக்கோப்பையில் குரோஷியா அணி 2ஆவது இடத்தை பிடித்திருந்தது. நட்சத்திர வீரரும், குரோஷியாவின் கேப்டனுமான லூகா மோட்ரிக் இந்த தொடருடன் ஓய்வு பெறுவதால், இந்த வெற்றியின் மூலம் அவரை வழியனுப்பி வைப்பதாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
— FIFA World Cup (@FIFAWorldCup) December 17, 2022
மொராக்கோவின் வரலாற்று பயணம்
மொராக்கோ அணி, 96 ஆண்டு உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. எனவே, இதே அதிரடி அடுத்த உலகக்கோப்பையிலும் தொடரும் என எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளை போன்று ஆப்பிரிக்க பாணி கால்பந்தாட்டம், உலகளவில் கால் பதிக்க மொராக்கோவின் இந்த வரலாற்று பயணம் மற்ற ஆப்பிரிக்க, ஆசிய அணிகளுக்கு பெரும் தூண்டு கோலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும், அர்ஜென்டீனா - பிரான்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் தங்களின் மூன்றாவது உலகக்கோப்பையை ருசிக்க காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | ஐபிஎல் அவருக்கு சரிப்பட்டு வராது - சொல்வது தினேஷ் கார்த்திக்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ