இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் டி-20 போட்டி டெல்லி புரோஜ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று உள்ள இந்திய அணி டி-20 தொடரையும் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அதேவேளையில், ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி டி-20 தொடரையும் வெல்ல தங்களை தயார் படுத்தி வருகிறது. எனவே டி-20 போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, இன்றைய போட்டியோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் விளையாடுவார? இல்லையா? என்பது போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு தான் தெரியும்.
அவரை பற்றி சில குறிப்பு:-
38 வயதான ஆஷிஷ் நெஹ்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர்.
1999-ம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக 17 டெஸ்ட் விளையாடி 44 விக்கெட் எடுத்துள்ளார்.
120 ஒருநாள் போட்டியில் விளையாடி 157 விக்கெட் எடுத்துள்ளார்.
26 டி20 போட்டியில் விளையாடி 34 விக்கெட் எடுத்துள்ளார்.
கேப்டன் அசாருதின் தலைமையில் தனது ஆட்டத்தை தொடங்கிய அவர், தற்போதைய கேப்டன் விராத் கோலி என பல கேப்டன்களிம் கீழ் விளையாடி உள்ளார்.