இந்த வீரர் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வேண்டும் - ரிக்கி பாண்டிங்!

டி20 உலகக் கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் இல்லை என்றால் ஆர்ச்சர்யப்படுவேன் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 12, 2022, 10:23 AM IST
  • கார்த்திக் ஐபிஎல் 2022-ன் போது RCBக்காக 183.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 330 ரன்கள் அடித்தார்.
  • தினேஷ் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என பாண்டிங் கூறியுள்ளார்.
  • கார்த்திக்கால் ஆட்டத்தை மாற்றி அமைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
இந்த வீரர் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வேண்டும் - ரிக்கி பாண்டிங்! title=

ஐபிஎல் 2022-ல் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை பார்த்து வியந்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.  இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2022)ன் போது தினேஷ் கார்த்திக்கின் செயல்பாடு அபரிவிதமாக இருந்தது.  அவர் கண்டிப்பாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று பாண்டிங் கூறியுள்ளார். கார்த்திக் ஐபிஎல் 2022-ன் போது RCBக்காக 183.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 330 ரன்கள் அடித்தார். இதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடருக்காக இந்திய அணியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பெற்றார்.  

மேலும் படிக்க | கூகுள், அமேசான், ஏர்டெல்... ஐபிஎல் உரிமையை கைப்பற்றப்போவது யார்?

 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெறத் தவறினால் தான் ஆச்சரியப்படுவேன் என்று பாண்டிங் கூறினார்.  "நான் அணி கேப்டனாக இருந்தால் நிச்சயம் தினேஷை அணியில் எடுப்பேன்,  அவரை ஐந்து அல்லது ஆறுவது இடத்தில் களமிறக்குவேன்.  இந்த ஆண்டு RCBக்காக அவரது ஆட்டம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் தனது ஆட்டத்தை மற்றொரு நிலைக்கு கொண்டு சென்றார். ரிஷப் பந்த் விக்கெட் கீப்பர் பேட்டராக இருப்பார், ஆனாலும் தினேஷ் கார்த்திக் அணியில் வேண்டும்.  

dinesh

விராட் கோஹ்லி, க்ளென் மேக்ஸ்வெல் நன்றாக விளையாடி வருகின்றனர்.  ஆனால் டிகே அதற்கு ஒரு அடி முன்னாள் உள்ளார். மற்ற RCB வீரர்களை விட கார்த்திக் ஆர்சிபி அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.  ஐபிஎல்லைப் போட்டியில் ஒரு சிறந்த வீரர் போட்டியை தன் பக்கம் மாற்ற முடியும்.  தினேஷ் கார்த்திக் அதனை இந்த ஆண்டு முழுவதும் ஆர்சிபி அணிக்காக செய்தார்.  இந்திய அணியிலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்" என்று பாண்டிங் கூறினார்.

மேலும் படிக்க | ஆவேஸ்கான் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க வீரரின் பேட் உடைந்தது - வீடியோ

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News