ரோஹித் சர்மா கேப்டன்சி குறித்து தினேஷ் கார்த்திக் கேள்வி!

இந்திய கிரிக்கெட் அணியில் மூன்று வடிவங்களிலும் கேப்டனாக இருப்பதில் ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 22, 2022, 09:12 AM IST
  • ரோஹித் ஷர்மா கடந்த இரண்டு வருடங்களாக காயத்தினால் அவதிப்பட்டார்.
  • ரோஹித் மூன்று வடிவங்களிலும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அனைத்து வடிவங்களிலும் கேப்டனாக ரோஹித்தின் இருப்பு குறித்து தினேஷ் கார்த்திக் கேள்வி.
ரோஹித் சர்மா கேப்டன்சி குறித்து தினேஷ் கார்த்திக் கேள்வி! title=

டி20 மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகுவதாக அறிவித்தார்.  ஒருநாள் போட்டிகளில் இருந்து பிசிசிஐ அவரை தானாகவே நீக்கி ரோஹித் சர்மாவிற்கு கேப்டன்சியை வழங்கியது.  சமீபத்தில் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ரோஹித்தை அறிவித்தது பிசிசிஐ. இதன் மூலம் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டியிலும் ரோஹித் சர்மா இந்திய அணியை அணியை வழிநடத்த உள்ளார்.  இருப்பினும், ரோஹித் சர்மா கடந்த சில ஆண்டுகளாக உடற்தகுதி பிரச்சைகளில் இருந்து வருகிறார். 

மேலும் படிக்க | என்னை ஓநாய்களிடம் தூக்கி எறியுங்கள், மீண்டு வருகிறேன் வைரலாகும் ரோஹித்தின் ட்வீட்

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேஸ்மென் தினேஷ் கார்த்திக் ரோஹித்தின் முழு நேர கேப்டன் பொறுப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.  ரோஹித் விளையாடப் போகும் கிரிக்கெட்டின் கால அளவு குறித்து சரியாகத் தெரியவில்லை. 34 வயதான அவர் சிறந்த வீரர் மற்றும் கேப்டன் என்றாலும் தொடர்ந்து எப்படி விளையாட போகிறார் என்பது சந்தேகமே. டீம் இந்தியாவின் கேப்டனாக தனது பங்கை நிறைவேற்றுவது ரோஹித்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

"ரோஹித் மிகப்பெரிய சந்திரசாலி.  இனி அவர் விளையாடும் கிரிக்கெட், மூன்று வடிவங்களிலும் எவ்வளவு சீராக விளையாட முடியும் என்பதை வரையறுக்கும். ரோஹித் இந்திய அணிக்காக ஆண்டு முழுவதும் நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டிய இடத்தில் இருக்கிறார். ரோஹித் போன்ற ஒரு பேட்ஸ்மேனுக்கு இது பெரிய சவாலாக இருக்கும். அவர் ஒரு சிறந்த கேப்டன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். 

rohit

குறிப்பாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3வது T20 போட்டியில் அவேஷ் கான் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரைப் பயன்படுத்திய விதத்திற்காக ரோஹித்தை பாராட்டியே ஆகா வேண்டும். ரோஹித் சரியான நேரத்தில் பந்துவீச்சாளர்களை சுழற்றினார்.  முக்கியமான நேரத்தில் அவேஷ் கானைக் கொண்டு வந்தார். மேலும், ஷர்துல் தனது முதல் ஓவரில் 18 ரன்கள் கொடுத்தார், ஆனால் 4/33 என்ற எண்ணிக்கையுடன் முடித்தார். ரோஹித் பந்துவீச்சாளர்களைப் புரிந்துகொண்டு அவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்பவர். இருப்பினும் ரோஹித் எவ்வளவு கிரிக்கெட் விளையாடப் போகிறார்? என்ற கேள்வி எப்போதும் இருக்கும்," என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

ரோஹித்தின் கீழ் பல இளம்  வீரர்களை உருவாக்குவதே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பெரிய நோக்கமாகும். கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அடுத்த தலைமைப் பாத்திரங்களுக்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். எவ்வாறாயினும், இந்த மாற்றம் எவ்வளவு விரைவாக நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2022 சீசன் தேதியில் மாற்றம்! ரசிகர்கள் ஹேப்பி - விரைவில் பிசிசிஐ அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News