IPL2022: தோனி விரைவில் வெளியிடப்போகும் அறிவிப்பு இதுதான்..!

இந்த சீசனிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்ஷிப்பை சக வீரரிடம் தோனி ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2023, 10:56 AM IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன்
  • விரைவில் கேப்டன்ஷியை ஒப்படைக்கிறார் தோனி
  • ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்படுகிறார்
IPL2022:  தோனி விரைவில் வெளியிடப்போகும் அறிவிப்பு இதுதான்..! title=

ஐ.பி.எல் போட்டி தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் தோனி. இவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 முறை ஐ.பி.எல் டைட்டிலை வென்று வாகை சூடியுள்ளது. 2020 ஆம் ஆண்டு புள்ளிப் பட்டியில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு, ஐ.பி.எல் வராலாற்றிலேயே முதன்முறையாக சென்னை அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு வெறி கொண்டு விளையாடி கோப்பையை தன்வசப்படுத்தியது.

மேலும் படிக்க | IPL2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி

இதற்கு தோனியின் கேப்டன்ஷியே முக்கிய காரணம் என அவரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். மேலும், அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டே ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தொடர்ந்து விளையாட உள்ளதாக அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால், சென்னை அணியின் கேப்டன்ஷிப்பில் அவர் தொடர்ந்து நீடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

ALSO READ | INDvsSA: முறைத்த ஜேன்சன்.. ஸ்டம்பை பறக்கவிட்ட பும்ரா..! Video

ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ரீட்டெயின் லிஸ்டில் அவரது பெயர் இரண்டாவதாக இடம்பெற்றிருந்தது. முதல் இடத்தில் ஜடேஜாவை அணி நிர்வாகம் ரீட்டெய்ன் செய்திருந்தது. அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் ரவீந்தர் ஜடேஜாவாக இருக்கும் என ரசிகரகள் கணித்தனர். அவர்களின் கணிப்பை உறுதி செய்யும் வகையில், இந்த சீசனிலேயே சென்னை அணியின் கேப்டன் ஷிப் பொறுப்பை ஜடேஜாவிடம் தோனி ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அறிவிப்பு ஐ.பி.எல் ஏலம் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியாகு என்றும் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News