அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் செரீனாவை வீழ்த்தி கனடாவின் பியான்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்!
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் இறுதி போட்டியில் கனடா நாட்டை சேர்ந்த பியான்கா ஆன்ட்ரீஸ்கு - அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் பலப்பரிட்சை நடத்தினர்.
பரபலப்பாக சென்ற இப்போட்டியில் பியாங்கா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதனால் கனடா நாட்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பியான்கா பெற்றுள்ளார்.
இதுகுறித்து பியான்கா தெரிவிக்கையில்., இதனை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். ஆனால், உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். இதற்காக மிக கடுமையாக உழைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் எனது கனவு மெய்யாகி உள்ளது. டென்னிஸ் விளையாட்டில் ஓர் உண்மையான சாதனையாளருக்கு எதிராக விளையாடியது ஆச்சரியம் அளிக்கிறது. இது ஒன்றும் எளிய விசயம் இல்லை. ஒவ்வொரு போட்டியை போன்றும் இதிலும் சிறந்த முறையில் விளையாட தயார் செய்து கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.