ஹர்திக் பாண்டியா 'கல்தா' மும்பை இந்தியஸ் அணிக்கு பெரிய பிரச்னை - கேப்டனாகும் ரோஹித்?

Hardik Pandya IPL 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா வரும் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 23, 2023, 03:10 PM IST
  • மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத்திடம் இருந்து ஹர்திக்கை வாங்கியது.
  • ஹர்திக் பாண்டியாவை சமீபத்தில் கேப்டனாகவும் நியமித்தது.
  • இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹர்திக் பாண்டியா 'கல்தா' மும்பை இந்தியஸ் அணிக்கு பெரிய பிரச்னை - கேப்டனாகும் ரோஹித்? title=

IPL 2024 Latest News: ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த பின்னர், சிறிது நாள்களிலேயே ஐபிஎல் தொடர் குறித்த பேச்சுகள் சூடுபறக்கத் தொடங்கின. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்றது பெரிய அளவில் பேசப்படவில்லை, ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸிடம் இருந்து வாங்கப்போகிறது என்பதுதான் ரசிகர்களுக்கு பெரும் விறுவிறுப்பை தரும் விஷயமாக இருந்தது. 

அந்த தகவல் விரைவிலேயே உண்மையானது. ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மும்பை இந்தியன்ஸ் அணிக்காக டிரேட் செய்யப்பட்டது உறுதியானது. சில நாள்களிலேயே வரும் ஐபிஎல் சீசனில் மும்பை அணியின் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டார். ஐபிஎல் ஏலத்தை ஒட்டி நடைபெற்ற இந்த காட்சிகள் அனைத்தும் ஏலத்தில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். மும்பை அணியும் ஏலத்தில் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கியது. கேம்ரூன் கிரீனை அதற்கு முன்னரே ஆர்சிபியிடம் டிரேட் செய்தனர்.

மேலும் படிக்க | உச்சகட்ட வெறியில் சர்ஃபராஸ் கான்... 63 பந்துகளில் சதம் - இனியாவது வாய்ப்பளிக்குமா பிசிசிஐ?

மும்பைக்கு முதல் ஆப்பு

இப்படி மும்பை இந்தியன்ஸ் அணியை சுற்றியே ஐபிஎல் தலைப்பு செய்திகள் சுழன்று கொண்டிருக்க, தற்போது மீண்டும் ஒரு புதிய தகவல் இணையத்தில் புயலை கிளப்பி உள்ளது. அதாவது, இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா காயத்தால் (Hardik Pandya Injury) அவதிப்பட்டு வரும் நிலையில், வரும் ஐபிஎல் சீசனில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

டி20 உலகக் கோப்பை?

உலகக் கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். அதில் இருந்து மீண்டு வரும் நிலையில், ஐபிஎல் போட்டி (IPL 2024) வரை முழுமையாக உடற்தகுதி பெற வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரையும், ஐபிஎல் தொடரையும் ஹர்திக் பாண்டியா தவறவிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அவர் ஐபிஎல் தொடரை தவறவிட்டால், டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடுவதும் கேள்விக்குறியாகும்.

இந்திய அணிக்கும் பிரச்னை

எனவே, இது மும்பை அணிக்கு மட்டுமின்றி இந்திய தேசிய கிரிக்கெட் (India National Cricket Team) அணிக்குமே பெரும் பிரச்னைதான். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பற்றாக்குறை இந்திய அணிக்கு நீடிக்கிறது. ஹர்திக் பாண்டியாவின் இந்த நீண்ட கால காயம் என்பது இந்திய அணிக்கு கூடுதல் தலைவலியை தரும் எனலாம். அதுமட்டுமின்றி, ரோஹித் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு திரும்பாத நிலையில், சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக இருப்பார் என தெரிகிறது. 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா (Rohit Sharma MI Captaincy) கேப்டன் பதவியில் இருந்து கீழ் இறக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு பதவி கொடுக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் மத்தியிலும் இந்த கேப்டன்ஸி மாற்றம் சலசலப்பை உண்டாக்கியது. சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் மறைமுகமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. 

மேலும் படிக்க | 19 Years Of Dhoni: இன்னும் முறியடிக்கப்படாத தல தோனியின் டாப் 7 சாதனைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News