ரோஹித் சர்மா மட்டுமில்லை... ஓய்வுபெறும் இந்த 3 வீரர்கள் - இந்திய அணிக்கு கஷ்ட காலம்!

Team India: நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட ரோஹித் சர்மா தவிர இந்த 3 வீரர்களும் ஓய்வுபெறுவது ஏறத்தாழ உறுதியாகிவிடும். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 10, 2024, 05:29 PM IST
  • இந்த WTC சுழற்சியில் இதுதான் இந்திய அணியின் கடைசி தொடராகும்.
  • அடுத்தாண்டு ஜூனில் WTC இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
  • இதற்கு தகுதிபெற இந்திய அணி அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
ரோஹித் சர்மா மட்டுமில்லை... ஓய்வுபெறும் இந்த 3 வீரர்கள் - இந்திய அணிக்கு கஷ்ட காலம்!  title=

Indian National Cricket Team: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் (India vs Australia) கடந்த 1996ஆம் ஆண்டு முதல் பார்டர் - கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy) என்ற பெயரில் ஆண்டுதோறும் டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றன. பெரும்பாலும் ஒவ்வொரு ஆண்டுகளும் இந்த டெஸ்ட் தொடர் நடைபெறும். ஒரு வருடம் இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது என்றால் அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும்.

இதுவரை சுமார் 16 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதில் 10 தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது. அதில் இரண்டு முறை (2018-19, 2020-21) ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி (Team India) தொடரை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி (Team Australia) 5 முறை தொடரை வென்றுள்ளது, அதில் ஒருமுறை மட்டுமே (2004-05) இந்திய மண்ணில் வென்றுள்ளது.

அழுத்தத்தில் ரோஹித் சர்மா

2003-04ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவானது. இதனால், 2002-03 தொடரை வென்றிருந்த இந்திய அணியே அந்த முறையும் கோப்பையை தக்கவைத்திருக்கிறது. இந்த ஒருமுறை மட்டுமே தொடர் டிராவாகி இருக்கிறது. அந்த வகையில், 2024-25ஆம் ஆண்டுக்கான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முறை 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

மேலும் படிக்க | IND vs AUS: ரோஹித் ஷர்மாவை பார்மிற்கு கொண்டு வர பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!

மூன்று போட்டிகள் பாக்கி உள்ள நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. தொடரை வென்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறப்போவது யார் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. மேலும், அடிலெய்டில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது, கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது கேப்டன்ஸி மட்டுமின்றி பேட்டிங் பார்ம் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

ஒரே ஒரு தோல்வி வந்துவிட்டால்...

இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லவில்லை. மேலும் தற்போது 11 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணிலேயே மிக மோசமான முறையில் 0-3 டெஸ்ட் தொடரை இழந்துள்ள இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடர் முக்கியமானதாக உள்ளது. இன்னும் போட்டியில் தோற்றால் கூட ஆஸ்திரேலியா WTC பைனலுக்குச் (ICC World Championship Final 2025) செல்லும் வாய்ப்பு பிரகாசமாகிவிடும்.

ஒருவேளை, அடுத்த போட்டியில் இந்திய அணி தோல்வியடையும்பட்சத்தில், ரோஹித் சர்மா இந்த தொடரின் இடையிலேயே சர்வதேச டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் ஒருவேளை இந்திய அணி WTC பைனலுக்கு தகுதிபெறாதபட்சத்தில், நிச்சயம் அடுத்தாண்டு ஜூன் மாதம்தான் போட்டி இருக்கிறது. 

ஓய்வுபெறும் 3 வீரர்கள்?

எனவே, இந்த WTC சுழற்சியுடன் ரோஹித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறலாம் (Retirement) என கூறப்படுகிறது. இதில் ரோஹித் சர்மா மட்டுமின்றி, விராட் கோலி (Virat Kohli), ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), ரவீந்திர ஜடேஜா (Ravichandran Ashwin) ஆகியோரும் இந்த WTC சுழற்சியோடு தங்களது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது. விராட் கோலி இடத்திற்கு கடுமையான போட்டி நிலவும். மாறாக ரவிசந்திரன் அஸ்வின் இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) மற்றும் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) இடத்திற்கு அக்சர் பட்டேல் ஆகியோர் இப்போதே தயாராக இருக்கிறார்கள் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியா தொடருக்கு பின்... டெஸ்டில் ஓய்வுபெற்ற 6 இந்திய வீரர்கள்... யார் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News