போஸ்ட் ஆபிஸ் மூலம் 30 லட்சம் ரூபாய் பெறுவது எப்படி?

போஸ்ட் ஆபிஸ் மூலம் சேமிப்பு பணத்துக்கு 30 லட்சம் ரூபாய் வட்டியுடன் திரும்ப பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள். 

Post Office | போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 30 லட்சம் ரூபாய் வட்டியுடன் சேர்த்து கிடைக்கும். கூடுதல் 20 லட்சம் ரூபாய் எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

1 /8

வங்கிகளைப் போலவே, வெவ்வேறு காலகட்டங்களுக்கான Fixed Deposit திட்டங்கள் தபால் நிலையங்களில் (Post Office) கிடைக்கின்றன. 5 வருட நிலையான இருப்பு தொகைக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதனுடன், வருமான வரிச் சட்டம் 80C இன் கீழ் வரிச் சலுகைகளையும் பெறுவீர்கள். இந்த பிக்ச்டு டெபாசிட் திட்டத்தின் கீழ் உங்கள் பணத்தை மூன்று மடங்காக அதிகரிக்கலாம்.

2 /8

வங்கியைப் போலவே, தபால் நிலையத்திலும் முதலீடு செய்யலாம். இதில், உங்கள் பணத்தின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. தபால் நிலையத்தில் இருக்கும் பல திட்டங்களில் ஒரு முக்கியமான திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.   

3 /8

தபால் அலுவலகத்தில் உங்கள் பணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க, நீங்கள் 5 வருட FD-ஐ தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தவுடன் 5 ஆண்டுகள் முதிர்ச்சி தேதி வரும் சமயத்தில் முன்கூட்டியே அந்த திட்டத்தில் தொடருவதற்கு நீட்டிப்பு செய்து கொள்ள வேண்டும். இரண்டு முறை அவ்வாறு நீங்கள் செய்ய வேண்டும். 

4 /8

அதாவது 15 வருடங்கள் இந்த FD திட்டத்தில் இருக்க வேண்டும். அதன்படி, இந்த எஃப்டியில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், 7.5 சதவீத வட்டி விகிதத்தில், 5 ஆண்டுகளில் இந்தத் தொகைக்கு ரூ.4,49,948 வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த தொகை ரூ.14,49,948 ஆக இருக்கும்.  

5 /8

ஆனால் இந்த திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், வட்டியாக மட்டும் ரூ.11,02,349 கிடைக்கும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களின் மொத்தத் தொகை ரூ.21,02,349. முதிர்ச்சியடைவதற்கு முன்பு நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை நீட்டிக்க வேண்டும். 

6 /8

அப்படிப்பட்ட நிலையில், 15வது ஆண்டில், 10 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு வட்டியாக மட்டும், 20,48,297 ரூபாய் கிடைக்கும். முதிர்ச்சியின் போது, ரூ.30,48,297 பெறுவீர்கள். அதாவது, உங்கள் அசலை விட இரண்டு மடங்கு வட்டியும், உங்கள் தொகையை மூன்று மடங்காகவும் பெறுவீர்கள்.

7 /8

தபால் அலுவலகத்தில் 1 வருட பிக்ச்டு டெபாசிட் திட்டத்தில், முதிர்வு தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் வரை நீட்டிக்கப்படலாம். 2 வருட FD முதிர்வு காலத்தின் 12 மாதங்களுக்குள் நீட்டிக்கலாம்.

8 /8

3 மற்றும் 5 வருட FD நீட்டிப்புக்கு, முதிர்வு காலத்தின் 18 மாதங்களுக்குள் அஞ்சல் அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இது தவிர, போஸ்ட் ஆபிஸ் கணக்கைத் திறக்கும்போதே முதிர்ச்சியடைந்த பிறகு கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம் என தெரிவித்துவிடலாம்.