சுகர் நோயாளிகள் அச்சம் இல்லாமல் பழங்களை சாப்பிட உதவும் ஆரோக்கிய குறிப்பு

Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும். அதிகப்படியான இனிப்பு, வறுத்த உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 10, 2024, 02:48 PM IST
  • நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடும்போது, ​​​​சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்படுகின்றது.
  • பழங்களை சாப்பிட விருப்பம் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
  • இதோ எளிய டிப்ஸ்.
சுகர் நோயாளிகள் அச்சம் இல்லாமல் பழங்களை சாப்பிட உதவும் ஆரோக்கிய குறிப்பு title=

Diabetes Control Tips: உலக மக்களை பாடாய் படுத்தும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இந்த நோய் ஒருமுறை வந்துவிட்டால், அதை குணப்படுத்த முடியாது, எனினும், ஆரோக்கியமான உணவுமுறை, வாழ்க்கை முறை மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும். அதிகப்படியான இனிப்பு, வறுத்த உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் ஆரோக்கியமான பழங்களும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. பெரும்பாலான பழங்களில் இயற்கை சர்க்கரை அதாவது பிரக்டோஸ் உள்ளது. இது நீரிழிவு நோயை மேலும் அதிகரிக்கும்.

அப்படியென்றால், சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் எங்கிருந்து கிடைக்கும்? சர்க்கரையை விட்ட பின்னரும், பழங்கள் மூலம் உடலில் சர்க்கரை சேர்ந்தால் என்ன செய்வது? பழங்களையும் உட்கொண்டு, சர்கரை அளவையும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும் ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். 

சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 10 கோடி என ஐசிஎம்ஆர் தெரிவிக்கின்றது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம் மற்றும் மரபணு காரணங்களால் மக்கள் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். இதில் பல வகைகள் உள்ளன. அவற்றில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் மிகவும் பொதுவானவை. 

டைப் 2 நீரிழிவு நோயின் முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறையாக கருதப்படுகின்றது. உணவு சாப்பிட்ட பிறகு நமது சர்க்கரை அளவு 200 mg/dl -க்கும் குறைவாக இருக்க வேண்டும். வெறும் வயிற்றில் அதன் அளவு 120 க்கும் குறைவாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பழங்களை இப்படி உட்கொள்ளலாம்

நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடும்போது, ​​​​சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்படுகின்றது. இதில் ஃபைபர் உள்ளது, இது இந்த செயல்முறையை மெதுவாக்குகிறது. ஆனால் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன. பழங்களை சாப்பிட விருப்பம் உள்ளவர்கள் அதனுடன் புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்தையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும் என நி;புணர்கள் கூறுகிறார்கள்.

மேலும் படிக்க | இன்பமான பாலியல் வாழ்க்கை வேணுமா? இந்த ஊட்டச்சத்துகள் முக்கியம் - உடனே நோட்ஸ் எடுங்க!

இந்த கூறுகள் கிளைசெமிக் ரெஸ்பான்சைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கிளைசெமிக் ரெஸ்பான்சின் மூலம்தான் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க ஒரு முக்கிய காரணம். ஆகையால், எந்தப் பழத்தைச் சாப்பிட்டாலும், அதனுடன் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து உள்ள பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது.

சுகர் நோயாளிகள் இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்

- சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை உடல்நலப் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

- தவறுதலாக கூட சர்க்கரை சேர்த்த தேநீர் அல்லது சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை உட்கொள்ள வேண்டாம். 

- கண்டிப்பாக தேநீர் குடிக்க வேண்டுமானால், அதனுடன் தேன் அல்லது வெல்லம் சேர்த்து குடிக்கவும்.

- வேர் காய்களை குறைவாக உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

- சேப்பங்கிழங்கு, நூல்கோல் போன்ற காய்கறிகளும் இரத்த சர்க்கரையை அதிகரிக்கின்றன. இவற்றில் உருளைக்கிழங்கு தான் முக்கியமானதாக உள்ளது.

மேலும் படிக்க | நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News