8th Pay Commission Latest News In Tamil: புத்தாண்டில் (2025) மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கிறது. அதில் முக்கியமானதாக எட்டாவது ஊதிய குழு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
Government Employees - Pensioners News: வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு உயர்வு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாக உள்ளது. அதுக்குறித்த விவரங்களை பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு உயர்வு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாக உள்ளது. அதுக்குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ₹18,000 ஆக உள்ளது. புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அபரீதமான ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.51,480 ஆக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
எட்டாவது ஊதிய குழுவை கொண்டுவர மத்திய அரசு பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அதாவது அரசு ஊழியர்களின் சம்பளத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் ஃபிட்மென்ட் காரணி (Fitment Factor) திருத்தப்பட வாய்ப்புள்ளது. அப்போது சம்பளம் உயரும்.
அடுத்த வருடம் எட்டாவது ஊதிய குழுவை அரசு அறிவித்து, அது அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் 186% உயரும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும்.
ஏழாவது ஊதியக் குழுவில் இருந்து எட்டாவது ஊதியக் குழுவாக மாற்றும்போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ₹18,000 லிருந்து அதிகரித்து ₹51,480 ஆக இருக்கும். எப்படி என்றால் ஃபிட்மென்ட் காரணி (Fitment Factor) 2.86 ஆக உயரும் போது இது சாத்தியமாகும்.
எட்டாவது ஊதியக் குழு கொண்டு வரப்பட்டால் சுமார் ஒரு கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள்.
எட்டாவது ஊதியக் குழு அமல் செய்தால் ஓய்வூதியதாரர்கள் எப்படி பயன் அடைவார்கள் எனப் பார்த்தால், அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியமும் 186% அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது ₹9,000 இருக்கக்கூடிய ஓய்வூதியம் ₹25,740 ஆக அதிகரிக்கலாம்.
புத்தாண்டில் இந்த நல்ல செய்தி கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் எட்டாவது ஊதியக் குழு அமல் செய்வது சம்பந்தமாக இதுவரையில் அரசுத் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டாவது ஊதிய குழுவுக்கு தேசிய கூட்டு ஆலோசனை அமைப்புகளின் கவுன்சில் (NC-JCM) கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தனது கோரிக்கையை அளித்துள்ளது. இது சார்ந்து கூட்டம் இந்த மாதம் நடைபெறும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்பு எட்டாவது ஊதிய குழு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.