அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் பார்க்க ரசிகர் ஒருவர் கங்கம்மா தல்லி வேடம் அணிந்து திரையரங்கிற்கு சென்றுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை கேரளாவைச் சேர்ந்த முகேஷ் மோகன் என்ற நபர் அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கொண்டு வைரல் ஆகி உள்ளது. கேரளாவின் திருச்சூரில் உள்ள ஒரு திரையரங்கிற்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இந்த நபர் மேள தாளத்திற்கு நடனமாடுவதை வீடியோவில் காணலாம். அந்த நபர் தனது உடல் முழுவதும் நீல நிற வண்ணத்தை பூசி உள்ளார். கங்கம்மா தல்லி தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் முகத்தில் சிவப்பு நிறத்தையும், வயிற்றில் அல்லு அர்ஜுனின் படத்தையும் வரைந்துள்ளார்.
மேலும் படிக்க | Suriya 45: சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் RJ பாலாஜி யார் தெரியுமா?
மேலும் திரையரங்கிற்கு வெளியே அல்லு அர்ஜுன் போல மிமிக்கிரி செய்தும், படத்தில் அவர் செய்வது போல ஹூக் ஸ்டெப் மற்றும் ஆக்சன் செய்து அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்துள்ளார். இந்நிலையில் வீடியோவில் வைரலான அந்த நபர் அந்த பகுதியை சேர்ந்த தாசன் என்பதும், சிறு வயதில் இருந்தே புலி வேஷம் அணிந்து திருவிழாக்களில் டான்ஸ் ஆடுபவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னரும் இதே போல திரைப்பட கதாபாத்திரங்களின் கெட்டப்களில் வலம் வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கக்கூடிய கங்கம்மா ஜாதரா திருவிழாவை மையமாக வைத்து இயக்குனர் சுகுமாரன் படத்தில் இப்படி ஒரு காட்சியை வைத்து இருப்பார். ஆண்கள் பெண்களைப் போல உடை அணிந்து இந்த திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
வசூல் சாதனை படைத்து வரும் புஷ்பா 2
கடந்த வாரம் வெளியான புஷ்பா 2 பத்ம உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியான 5 நாட்களில் இதுவரை ரூ. 880 கோடிக்கு வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து நாட்களில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 709.3 கோடியும், வெளிநாட்டில் ரூ. 171 கோடியும் வசூலித்துள்ளது. உலகளாவிய வசூலில் வேகமாக ரூ. 800 கோடியை தொட்ட முதல் இந்திய படம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புஷ்பா 2 படம் வெளியான முதல் நாளில் மட்டுமே ரூ. 294 கோடி வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. மேலும் இதற்கு முன்பு இருந்த வசூல் சாதனைகளையும் உடைத்துள்ளது. ராஜமௌலியின் RRR படம் ரூ. 223.5 கோடியும், பாகுபலி 2 ரூ. 217 கோடியும், கல்கி 2898 AD ரூ. 175 கோடியும் வசூல் செய்து இருந்தது. மேலும் புஷ்பா 2 படத்தின் ஹிந்தி பதிப்பு முதல் நாளில் ரூ. 72 கோடி வசூல் செய்து ஷாருக்கானின் ஜவான் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்தது. ஏற்கனவே அதிக லாபத்தில் உள்ள புஷ்பா 2 திரைப்படம் 1200 முதல் 1500 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | சூர்யா 45 படத்தின் நாயகி யார்? சூர்யாவுடன் ஏற்கனவே ஜோடி போட்டவர்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ