இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிக பெரியதாக உள்ளது. தினசரி லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிக உதவியாக ரயில் போக்குவரத்து உள்ளது. இதனால் ரயிலில் டிக்கெட் கிடைப்பதும் சிரமமான ஒன்றாக உள்ளது. இந்த பிரச்சனைகளை குறைக்க தட்கல் டிக்கெட் முறை அமலில் உள்ளது. தட்கல் டிக்கெட் என்பது ஒரு சிறப்பு வகை ரயில் டிக்கெட் ஆகும். நீங்கள் பயணம் செய்யும் ஒரு நாளுக்கு முன்பு உங்களது டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். கடைசி நிமிடத்தில் பயணத்தை திட்டமிடுபவர்களுக்கும், அவசர தேவைக்காக செல்பவர்களுக்கும் இந்த டிக்கெட் முறை உதவிகரமாக உள்ளது.
மேலும் படிக்க | ஓய்வுபெறுகிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்: உருக்கமாய் போட்ட ட்வீட்
சமீபத்தில், தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறையில் இந்திய ரயில்வே துறை சில மாற்றங்களை செய்துள்ளது. தட்கல் டிக்கெட்டின் விலை, சாதாரண டிக்கெட்டின் விலையைவிட சற்று அதிகமாக இருக்கும். தட்கல் டிக்கெட்டை குறிப்பிட்ட நேரத்தில் தான் புக்கிங் செய்ய முடியும். அதன்படி, ஏசி வகுப்புகளுக்கான தட்கல் டிக்கெட் காலை 10 மணிக்கு தொடங்கும், அதே நேரத்தில் ஏசி இல்லாத சாதாரண வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்கும். தட்கல் டிக்கெட் புக்கிங் திறக்கப்படும் சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்றுவிடும். இந்த முன்பதிவை எளிதாக இந்திய ரயில்வே பல முயற்சிகள் செய்தபோதிலும் எதுவும் பலனளிக்கவில்லை.
தட்கல் முன்பதிவு
ஒரு நபர் தனது IRCTC கணக்கு மூலம் அதிகபட்சமாக 4 தட்கல் டிக்கெட்களை மட்டுமே புக் செய்ய முடியும். அதற்கு மேல் புக்கிங் செய்ய முடியாது. தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதே போல உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்களை ரத்து செய்தால் பணம் திரும்ப தரப்படமாட்டாது. ரயில் ரத்தானால் மட்டுமே பணம் திரும்ப கிடைக்கும்.
தட்கல் டிக்கெட் எப்படி புக் செய்வது?
தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய, ஐஆர்சிடிசி கணக்கு இருக்க வேண்டும். இணையதளம் அல்லது ஆப் பயன்படுத்தி உங்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற விவரங்கள் கொண்டு புதிய கணக்கை உருவாக்கலாம். மேலே குறிப்பிடப்பட்ட நேரத்தில் உங்களது பயண விவரங்களை உள்ளிட்டு தட்கல் டிக்கெட் என்பதை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் பயணம் செய்ய விரும்பும் ரயிலை தேர்வு செய்து பின்னர் பயணிகளின் பெயர்கள், வயது மற்றும் அடையாளச் சான்று விவரங்களை உள்ளிட்ட வேண்டும். பிறகு உங்களது விருப்பமான முறையில் பணம் செலுத்த வேண்டும்.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, UPI, நெட் பேங்கிங் அல்லது டிஜிட்டல் வாலட்டை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்ய பணம் செலுத்தலாம். பலருக்கும் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும் போது கிடைப்பதில்லை, எனவே முன்பதிவு நேரத்திற்கு முன்பே அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு தயாராக இருப்பது நல்லது. முடிந்தவரை UPI அல்லது நெட் பேங்கிங் போன்ற கட்டண முறையை தேர்வு செய்தால் டிக்கெட் எளிதில் கிடைக்கும். அதேபோல பயணிகளின் விவரங்களை முன்கூட்டியே IRCTC கணக்கில் பதிவு செய்து கொண்டால் டிக்கெட் புக்கிங்கை இன்னும் எளிதாக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ