PF உறுப்பினர்கள் டிசம்பர் 15 -க்குள் இதை செய்ய வேண்டும்: தவறினால் பெரும் நஷ்டம்

EPFO New Rules: UAN மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக இருந்தது. அதன் பிறகு, இது டிசம்பர் 15 வரை நீட்டிக்கபட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 10, 2024, 03:54 PM IST
  • பிஎஃப் சந்தாதாரரா நீங்கள்?
  • அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது.
  • இதை பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.
PF உறுப்பினர்கள் டிசம்பர் 15 -க்குள் இதை செய்ய வேண்டும்: தவறினால் பெரும் நஷ்டம் title=

EPFO New Rules: பிஎஃப் சந்தாதாரரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இதை பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அவ்வப்போது பல புதிய விதிகளை உருவாக்குகிறது, ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றங்களை செய்கிறது. இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) வசதிகளை அதிகரிக்க இப்படிப்பட்ட மாறுதல்கள் செய்யப்படுகின்றன.

முன்னதாக UAN மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக இருந்தது. ஆனால் ஏராளமான ஊழியர்கள் அந்த காலக்கெடுவை தவறவிட்டனர். அதன் பிறகு, இது டிசம்பர் 15 வரை நீட்டிக்கபட்டுள்ளது. EPFO இந்த பணியை செய்து முடிக்க இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) புதிய தனியார் துறை ஊழியர்களுக்கான உலகளாவிய கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இதற்காக, இந்த ஊழியர்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் தங்களது யுஏஎன் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைக்க வேண்டும். முன்னதாக அதன் கடைசி தேதி நவம்பர் 30 ஆக இருந்தது. ஆனால் ஏராளமான ஊழியர்கள் அதை தவறவிட்டனர். EPFO அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

UAN செயலில் இருப்பதால், அதாவது ஆக்டிவ்வாக இருப்பதால், பணியாளர்கள் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் பலன்களைப் பெற முடியும் என்று EPFO ​​கூறுகிறது. அனைத்து புதிய ஊழியர்களின் UAN மற்றும் வங்கிக் கணக்குகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் புதுப்பிக்குமாறு முதலாளிகளுக்கு / நிறுவனங்களுக்கு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | UIDAI:ஆதார் கார்டு இலவச விண்ணப்ப கடைசித் தேதி நெருங்கியது...உடனடி விண்ணப்பம் வரவேற்பு!

UAN உடன் இணைக்கவில்லை என்றால் என்ன நஷ்டம்?

முழுமையான விவரங்களுடன் ஆதார் மற்றும் வங்கிக் கணக்குடன் யுஏஎன் எண்ணை இணைத்தால் மட்டுமே திட்டத்தின் DBT எனப்படும் நேரடிப் பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer) சாத்தியமாகும். தற்போது, ​​நடப்பு நிதியாண்டில் பணியில் சேர்ந்த ஊழியர்களின் தகவல்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டத்தில், பழைய ஊழியர்களும் தங்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.

How to activate UAN Online: UAN -ஐ ஆக்டிவேட் செய்வ்தற்கான செயல்முறை

- முதலில் EPFO ​​போர்ட்டலுக்கு (https://www.epfindia.gov.in/) செல்லவும். 
- முக்கியமான இணைப்புகளின் கீழ் உள்ள Activate UAN என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- UAN, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- ஊழியர்கள் தங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- அதன் பிறகு ஆதார் OTP சரிபார்ப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
- உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெற, 'Get Verification PIN' என்பதை கிளிக் செய்யவும்.
- செயல்படுத்தலை முடிக்க OTP ஐ உள்ளிடவும்.
- வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் அனுப்பப்படும்.

மேலும் படிக்க | ஓய்வுபெறுகிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்: உருக்கமாய் போட்ட ட்வீட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News