திருப்பதியில் 25 வருடத்திற்கு இலவச விஐபி தரிசனம்! யாருக்கு இந்த சூப்பர் சலுகை?

Tirumala Tirupati Announces 25 Years Free VIP Dharshan : இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்றாக விளங்கும் திருப்பதியில் குறிப்பிட்ட சிலருக்கு 25 வருடங்களுக்கு விஐபி தரிசத்தில் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அது யாருக்கு தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Dec 11, 2024, 06:38 PM IST
  • 25 வருடத்திற்கு இலவச விஐபி பாஸ்!
  • கூடவே தங்க இடம், 20 லட்டுகள்
  • யாருக்கு இந்த சலுகை?
திருப்பதியில் 25 வருடத்திற்கு இலவச விஐபி தரிசனம்! யாருக்கு இந்த சூப்பர் சலுகை?  title=

Tirumala Tirupati Announces 25 Years Free VIP Dharshan : ‘திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும்’ என பிறர் கூற கேட்டிருப்போம். இதை நம்பும் இந்திய மக்கள் பலர், வருடத்தில் 4 முறையாவது திருப்பதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருமலை திருப்பதி நிர்வாகம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. 

திருமலை திருப்பதி: 

பெருமாளின் பிரசித்தி பெற்ற இந்திய கோயில்களுள், முதன்மை பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது திருப்பதி. இங்கு வார நாட்கள், வார இறுதி நாட்கள் என்று பாராமல் மக்கள் கூட்டம் அலைமோதுவதுண்டு. குறிப்பாக வருடப்பிறப்பு, சொர்க்கவாசல் திறப்பு, மார்க்கழி மற்றும் புரட்டாசி மாதங்களில் பல லட்சம் பக்தர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பெருமாளை தரிசனம் செய்வர். குறிப்பாக இங்கு தமிழ் மக்கள் அதிகமாக செல்வது வழக்கம்.

தரிசன முறை:

அனைத்து கோயில்களிலும் இப்போது பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் விஐபி தரிசன முறை வந்துவிட்டது. இதற்கு திருப்பதி கோயிலும் விதிவிலக்கல்ல. இங்கு பொது தரிசனத்தில் நின்று பெருமாளை தரிசனம் செய்ய கட்டணம் ஏதும் தேவையில்லை. ஆனால், அதற்கென்று தனியாக கீழ் திருப்பதியிலேயே டோக்கன் வாங்கிக்கொண்டு மேல் திருப்பதிக்கு செல்ல வேண்டும். அதே போல ரூ.300 டிக்கெட் தரிசனமும் இருக்கிறது. 

இதில், நம்முடைய ஆதார் கார்டை வைத்து திருப்பதி தேவஸ்தானத்திற்கென்று இருக்கும் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். பின்பு கவுன்டரில் சரிபார்ப்பு பணிகள் முடிந்த பிறகு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இது இல்லாமல் இருக்கும் இன்னொரு முறை, விஐபி தரிசனம். இந்த விஐபி தரிசனத்தில் சாமி பார்க்க, ஒரு ஆளுக்கு ரூ.10,000 என கூறப்படுகிறது. 

நீதிமன்ற வழக்கு!

திருப்பதியில் அவ்வப்போது டிக்கெட் விநியோகிக்கும் பணிகளிலும், லட்டு வினியோகம் செய்யும் பணிகளிலும் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போதும் ஒரு சில மாற்றங்களை திருமலை நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. 

2008ஆம் ஆண்டு, வேலூர் பொற்கோயிலில் இருப்பதை போல, திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும், கர்ப்பகக்கிரகத்தோடு, தங்க விமான கோபுரத்தின் கீழே இருக்கும் சுவர்கள் தங்கத்தால் பொருத்த வேண்டும் என அப்போதைய திருப்பதி தேவஸ்தான தலைவர் ஆதிகேசவுலு நாயுடு விரும்பினார். 

இந்த பணிகளை மேற்கொள்ள, பக்தர்களிடம் தங்கத்தை நன்கொடையாக பெற முடிவெடுத்த அவர்கள், பலரிடம் இருந்து கிலோ கணக்கில் நன்கொடை வாங்கி தங்க தகடுகள் அமைக்க திட்டமிட்டிருக்கின்றனர். இதற்கு வெளிநாடுகளில் இருந்தும் கூட நன்கொடைகள் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 

காரணம், தங்க தகடுகளை பதிக்க  சுவரில் துளைகள் போட்டால், கர்ப்பகக் கிரகத்தினை சுற்றியிருக்கும் சுவர்களில் இருக்கும் தமிழ் கல்வெட்டுகள் அழிந்து போகலாம். இதனால், இத்திட்டத்தை கை விட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். 

மேலும் படிக்க | பஸ் vs ரயில் : திருப்பதிக்கு எதில் சென்றால் கட்டணம் குறைவு

25 வருடத்திற்கு விஐபி தரிசனம்!!

பக்தர்களிடம் இருந்து தங்கம் நன்கொடையாக பெறப்பட்டதை தொடர்ந்து, அந்த திட்டம் நீதிமன்ற வழக்குக்கு பிறகு கைவிடப்பட்டது. இதையடுத்து, நன்கொடை அளித்தவர்களுக்கு அதை அப்படியே திருப்பி தர திருப்பதி நிர்வாகம் முடிவெடுத்ததாம். ஆனால், இதற்கு பக்தர்கள் பலர் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். தங்கள் நன்கொடையை திரும்ப வாங்க மறுத்த பக்தர்களுக்கு தற்போது புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தங்கத்தை நன்கொடையாக வழங்கி, அதை திரும்ப வாங்க மறுத்த பக்தர்களுக்கு, இனி ஒரு ஆண்டில் 3 முறை விஐபி தரிசனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவர்கள் வர்ம் 3 முறையும் 3 நாட்கள் தங்குவதற்கான அறைகள் வழங்கப்பட்டு, சிறிய அளவிலான 20 லட்டுகள் வழங்க்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனுடன் சேர்த்து 5 கிராம் தங்க காசு, 50 கிராம் வெள்ளி டாலர் ஆகியவையும் வழங்கப்படுமாம். 

மேலும் படிக்க | Tirupati | தடைகளை தாண்டி திருப்பதி செல்ல வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News