ஆஸ்திரேலிய ஓபன்: சரித்திரம் படைத்த ரஃபேல் நடால்

டென்னிஸ் போட்டிகளில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற சரித்திர சாதனையை படைத்துள்ளார் ரஃபேல் நடால். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 30, 2022, 10:03 PM IST
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி
  • ஆடவர் ஓற்றையர் பிரிவில் நடால் சாம்பியன்
  • 21 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற முதல் வீரர்
ஆஸ்திரேலிய ஓபன்: சரித்திரம் படைத்த ரஃபேல் நடால் title=

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இறுதி சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், ரஷ்யாவைச் சேர்ந்த மெட்வடேவ்-ஐ எதிர்கொண்டார். தொடக்கம் முதல் போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. முதல் செட்டை மெட்வடேவ் கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது செட்டும் மெட்வடேவ் கைப்பற்ற ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது.

ALSO READ | Australian Open: இறுதிப்போட்டியில் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு..!

அடுத்த செட்டில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ரஃபேல் நடால், இறுதிவரை ஆட்டத்தை தன்பக்கமே வைத்திருந்தார். அதாவது, 3வது மற்றும் 4வது செட்டை அடுத்தடுத்து கைப்பற்றி அசத்தினார். இதனால், 2க்கு 6, 6க்கு 7, 6க்கு 4, 7க்கு 5 என்ற இருவரும் சமநிலையில் இருந்தனர். கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தீர்மானிக்கும் இறுதி மற்றும் 5வது சுற்றில் இருவரும் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ALSO READ | ’தடை.. அதை உடை..’ வலிகளை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டிய நடால்

ரஃபேல் நடால் இறுதியில் 7க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப்பெற்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய ஓபன்  பட்டத்தை 2வது முறையாக வெல்லும் நடால், ஒட்டுமொத்தமாக இதுவரை 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற சரித்திரத்தை படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக ரோஜர் பெடரர் மற்றும் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளனர்.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News