Weekly Horoscope Tamil : 12 ராசிகளுக்கும், அவரவர்களின் ஜாதக பொருத்தங்களின் படி, சில பலன்கள் அமையும். அந்த வகையில், வரும் வாரம் எந்தெந்த ராசிக்கு, என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள், இந்த வாரம் எந்த முடிவு எடுத்தாலும் அதில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். நெருக்கமானவர்களுடன் சில மனக்குழப்பங்கள் ஏற்படலாம். அவர்கள், யாரிடம் பேசினாலும், பார்த்து பேச வேண்டும். சிங்கிளாக இருப்பவர்கள், தங்கள் மனதுக்கு பிடித்தவர்களை சந்திக்கலாம். சில அனாவசிய செலவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
ரிஷபம்:
குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். தொழில் வாழ்க்கையில் சில தடங்கல்கள் ஏற்பட்டாலும் அதனை சமாளிப்பீர்கள். எந்த வேலையையும் தள்ளிப்போடாமல் முடிடுத்து விடுவது நல்லது. சில சுப காரியங்களில் கலந்து கொண்டு, அங்கு பொறுப்புணருவுடன் நடந்து கொள்வீர்கள். சில முக்கியமானவர்களை சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கலாம். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயம் வரலாம்.
மிதுனம்:
புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். ஒரே நேரத்தில் அனைத்து வேலைகளையும் செய்ய நினைக்க வேண்டாம். வாரத்தின் தொடக்கத்திலேயே சில புதிய ஆரம்பங்களுக்கான வாய்ப்பு உங்களை தேடி வரலாம். சின்ன சின்ன முதலீடுகளில் கவனம் செலுத்தி, அதன் மூலம் லாபம் பார்ப்பீர்கள்.
கடகம்:
கடக ராசியை சேர்ந்தவர்கள், இந்த வாரத்தில், சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் செய்யும் சில விஷயங்களால் பாராட்டை பெறுவீர்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தும். தம்பதிகளுக்குள் நெருக்கம் உண்டாகும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து, சேமிப்பில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்:
உங்கள் திறமையை காட்ட வேண்டிய வாய்ப்புகள் இந்த வாரத்தில் வந்து சேரலாம். தனிப்பட்ட உறவுகள் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். புதிதாக கையில் எடுத்திருக்கும் திட்டங்கள், லாபத்தை கொடுக்கும். கவனம் சிதறாமல் உங்களுக்கான வேலைகளை செய்து முடிப்பீர்கள். செவ்வாய்க்கிழமை எதிர்பாராத விதமாக சில செலவுகள் ஏற்படலாம். ஆனால் அதையும் சமாளித்து விடுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசியை சேர்ந்தவர்கள், இந்த வாரம் சுய ஒழுக்கத்துடன் இருப்பீர்கள். பல நாட்களாக தீராமல் இருந்த சில பிரச்சனைகளுக்கு இந்த வாரம் தீர்வு கிடைக்கலாம். சில விஷயங்கள் உங்களை எல்லையை தாண்டி இருந்தாலும் அதனை செய்து முடிப்பீர்கள். புதன் மற்றும் சனிக்கிழமை உங்களுக்கு அனுகூலம் தரும் நாட்களாக உள்ளது.
துலாம்:
இந்த வாரம், உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை சமாளிக்க சிரமப்படுவீர்கள். படைப்பாளிகள், வித்தியாசமாக யோசித்து சில விஷயங்களை செய்வீர்கள். தம்பதிகள், நெடுந்தூரம் செல்ல பயணங்களை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குழப்பம் கொடுத்து வந்த சில விஷயங்கள், இந்த வாரம் விலகலாம். சில பழைய பழக்க வழக்கங்களை விட்டுத்தள்ளுவீர்கள். வாழ்க்கையையே மாற்றும் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எடுத்த சில முக்கிய முடிவுகளுக்கான வெகுமதி வார இறுதியில் வந்து சேரலாம். தனுசு:
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள், இந்த வாரம் தங்கள் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் மதிப்பு கொடுப்பவர்களாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில், உடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் மேலிடத்தில் இருப்பவர்களுடன் இருக்கும் உறவு மேம்படும். செலவு செய்யும் போது கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள், தங்களின் தனிப்பட்ட சில விருப்பங்களை இந்த வாரம் நிறைவேற்றிக்கொள்வர். வாரத்தின் இடையில் குடும்பத்தில் சில பிரச்சனைகள் எழுந்து, பின்னர் அதுவே சரியாகும். முதலீடுகள் குறித்து தகுந்த ஆலோசனை பெற்ற பின்பு அதற்குரிய முடிவுகளை எடுப்பது நல்லது. மன நலனிலும் உடல் நலனிலும் இனி வரும் காலங்களில் அக்கறை செலுத்துவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத விதமாக சில நல்ல வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டலாம். உங்களை போல மனம் கொண்ட சில பேரை சந்திப்பீர்கள். இதனால் நல்ல அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு வேலை ரீதியாக சில வெற்றிகள் கிட்டும். வியாழக்கிழமையில் சில புதிய வாய்ப்புகள் உங்கள் கையில் வந்து சேரும். நிதி நிலையை பாதுகாக்க, சில திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். முன்னர் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தி விடுவீர்கள்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்
மேலும் படிக்க | தலைமைத்துவ பண்பு நிறைந்த 6 ராசிகள்! ரொம்ப பவர்ஃபுல்லா இருப்பாங்களாம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ