வார இறுதி ராசிப்பலன்: இந்த ஆண்டின் கடைசி வாரம் உங்களுக்கு எப்படியிருக்கும்?

Weekly Horoscope 25th December to 31st December 2023: 2023ஆம் ஆண்டு விரைவில் தொடங்க உள்ளது. அந்த வகையில், வரும் வாரம் யார் யாருக்கு என்னனென்ன பலன்கள் என்பதை இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Dec 24, 2023, 02:49 PM IST
  • இந்த ஆண்டின் இறுதி வாரம் வரப்போகிறது.
  • ஜோதிட பலன்களின் படி சிலருக்கு அதிர்ஷ்டம் கொட்டும்.
  • இந்த வாரம் உங்களது ராசிக்கு என்ன பலன்?
வார இறுதி ராசிப்பலன்: இந்த ஆண்டின் கடைசி வாரம் உங்களுக்கு எப்படியிருக்கும்?  title=

2023ஆம் ஆண்டு சில நாட்களுக்குள் முடிவடைய உள்ளது. ஒவ்வொருவரின் கிரக பலன்களுக்கேற்ப அவரவருக்கு ஒவ்வொரு வாரமும் அதிர்ஷ்டமும், ஆச்சரியங்களும் வந்து சேரும். சிலருக்கு இந்த வாரம், வாழ்க்கையில் முன்னேற்ற பாதைகள் வர உள்ளன. சிலருக்கு வெற்றி வாய்ப்புகளும் வந்து சேர உள்ளன. வரும் வாரம் உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்கள் இருக்கின்றன என பார்ப்போமா?

மேஷம்:

உங்கள் தொழில் வாழ்க்கையில் இந்த வாரம் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்திப்பீர்கள். உங்கள் வேலையில், ஒரு புதிய திட்டத்தைத் நீங்கள் தொடங்கலாம் அல்லது வேறு நல்ல  இடமாற்றத்தையும் மேற்கொள்ளலாம். சில நேரங்களில் உங்களுக்கு உங்களது நண்பர்களின் ஆலோசனை வேண்டுமென தோன்றலாம். உங்கள் அன்புக்குரியவர்களிடம் இருந்து உங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும். பண விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். 

ரிஷபம்:

இந்த வாரம் உங்களுக்கு சில எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும். இந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்கள் திறன் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் வலிமையான முன்னேற்றங்களை ஏற்படுத்தும். உங்கள் உள்ளுணர்வுகளை எப்போதுமே நம்புங்கள். இந்த வாரம் நீங்கள் உங்கள் வேலையில் வெற்றி அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் நம்பிக்கை வையுங்கள். உங்களுடன் வேலை பார்ப்பவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். இந்த வாரம் எந்த முடிவையும் சீக்கிரமாக எடுக்க வேண்டாம். 

மிதுனம்:

இந்த வாரம் உங்களது உடல் நலனை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது பிசியான வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களது வேலையில் சிறிது அழுத்தமான தருணங்கள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்க கூடிய சக்தி உங்களுக்கு ஏற்படும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்புகள் கிடைக்கலாம். உங்களது உடல் நலனையும் மன நலனையும் நல்ல நிலையில் பார்த்துக்கொள்வது முக்கியம். 

மேலும் படிக்க | 30 ஆண்டுக்குப் பின் கும்ப ராசியில் சனி.. இந்த ராசிகளுக்கு திடீர் திருப்பம், ராஜயோகம்

கடகம்:

இந்த வாரம் பல எதிர்பாராத வாய்ப்புகள் உங்களை வந்து சேரும். இது, தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட வாழ்க்கையையும் உங்களை உயர்த்திக்கொல்ள உதவும். இந்த வாரம் உங்களது காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கல் தீரும். இந்த வாரம் உங்களுக்கு எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். உங்கள் உடல் நலனை பாதுகாக்க கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய வேண்டியது கட்டாயம்.

சிம்மம்:

இந்த வாரம் உங்கள் ஆர்வத்தில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் உற்சாகம் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களை ஊக்குவிக்கும். இது, நேர்மறையான மற்றும் துடிப்பான சூழ்நிலையை உருவாக்கும். பழைய நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம் உங்களது வேலையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படும். இந்த வாரம் உங்களது அன்புக்குரியவர்களுக்கு பிடித்த விஷயங்கலை செய்வீர்கள். உங்களது இதயத்திற்கு பிடித்த காரியங்களை மட்டும் செய்து அதன் மூலம் பயன் பெறுவீர்கள். 

கன்னி:

இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நபருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உங்கள் நல்வாழ்வுக்கு துணை புரியும் விஷயங்களை மட்டும் செய்ய வேண்டும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டையும் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். இந்த வாரம், உங்களது வேலைகளை முன் கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். சில விலை உயர்ந்த பொருட்களை வாங்கவும் வாய்ப்புண்டு.

துலாம்:

இந்த வாரம், உங்களது உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சில புதிய மாற்றங்களால் உங்களது வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களது வேலை மூலமாக சில புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பாராத வகையில் உங்களுக்கு செல்வம் வந்து சேரும். 

விருச்சிகம்:

இந்த வாரம் நீங்கள் நேர்மறையான மனநிலையுடன் இருப்பீர்கள். நீங்கள் சவால்களில் கவனம் செலுத்துவதை விட தீர்வுகளில் கவனம் செலுத்துவீர்கள். உங்களது உள்ளுணர்வு, உங்களை இந்த வாரம் நல்வழிப்படுத்தும். பெரியவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெறுவீர்கள். அலுவலகத்தில் சிலருக்கு சவாலான நேரங்கள் வரலாம். அதை எதிர்கொள்ள உங்களுக்கு சிலரது துணை தேவைப்படும். இதுவரை நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் செல்வம் வந்து சேரும். 

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள், இந்த வாரம் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து ஆதரவு பெறுவீர்கள். இந்த வாரம் உங்களுக்கு சில நல்ல மறக்க முடியாத தருணங்கள் ஏற்படும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்த வாரம் இணக்கமான சூழல் ஏற்படும். சிலருக்கு பண ரீதியாக சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால், ஒரு வழியில் இருந்து பணம் வருவது தடைப்பட்டால் இன்னொரு வழியில் வந்து சேரும். சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டால் மூலிகை தண்ணீர் குடிக்கவும். 

மகரம்:

மகர ராசிக்காரர்கள், உங்களுக்கு பிடித்தமான இடத்தை சுத்தம் செய்வீர்கள். மனம், உடல் ஆகியவையும் இந்த வாரம் தெளிவடையும். உங்கள் கனவுகளையடைய சிறு சிறு அடிகளை எடுத்து வையுங்கள். தொழில் சம்பந்தமாக முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் கவனம் தேவை. உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் புதியதாக சில நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு புது அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பெரிய முதலீடுகளை செய்வதற்கு முன்னர் யோசனை செய்யவும். உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியமாகும். சில உடல் நலக்கோளாறுகளால் அவதிக்குள்ளாக கூடும். 

மீனம்:

இந்த வாரம் உங்களது பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அதை திருத்திக்கொள்வீர்கள். இந்த வாரம் வேலையில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் அன்புக்குரியவருடன் சண்டை போடாமல் இருக்கவும். உங்களது உடல் நலனையும் மன நலனையும் பார்த்துக்கொள்வது அவசியம். 

மேலும் படிக்க | 12 ஆண்டுக்குப் பிறகு உருவாகும் சக்திவாய்ந்த அபூர்வ ராஜயோகம், இந்த ராசிகளுக்கு பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News