நிர்ஜல ஏகாதசி 2022, விரத விதிகள்: ஏகாதசி விரதம் இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சில ஏகாதசிகளுக்கு மிகவும் சிறப்பான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, ஜ்யேஷ்ட மாதத்தின் சுக்ல பக்ஷ ஏகாதசி, அதாவது ஆனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி ஆகியவைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறன.
எனினும், இந்த முறை ஆனி மாதத்தில் வரும் நிர்ஜல ஏகாதசி விரதம் வைகாசி மாதத்திலேயே கடைபிடிக்கப்படுகின்றது. இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவருக்கு, ஆண்டின் 24 ஏகாதசி விரதங்களையும் கடைப்பிடித்த புண்ணியம் கிடைக்கிறது.
இன்று அதாவது ஜூன் 10 அன்று வரும் ஏகாதசி, அவரவர் பஞ்சாங்கத்திற்கு ஏற்ப நாட்டின் சில இடங்களில் நிர்ஜல ஏகாதசியாகவும் சில இடங்களில் மோகினி ஏகாதசியாகவும் கொண்டாடப்படுகின்றது.
இந்த ஏகாதசியில் தண்ணீர் கூட அருந்தாமல், பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள். நிர் என்றால் இல்லாமல் என பொருள், ஜல என்றால் தண்ணீர் என்று பொருள். தண்ணிர் கூட அருந்தாமல் கடைபிடிக்கப்படும் இந்த ஏகாதசி விரதம் நிர்ஜல ஏகாதசி என அழைக்கப்படுகின்றது. இன்று, ஜூன் 10, வெள்ளிக்கிழமை, நிர்ஜல ஏகாதசி விரதம் அனுசரிக்கப்படுகிறது.
வெயில் காலத்தில் தண்ணீர் அருந்தாமல் நிர்ஜல ஏகாதசி விரதம்
இந்து மதத்தில் தண்ணீர் கூட அருந்தாமல் அனுசரிக்கப்படும் மற்ற விரதங்களும் உள்ளன. எனினும், நிர்ஜல ஏகாதசி கடுமையான வெயில் காலத்தில் அனுசரிக்கப்படுவதால், இது மிகக் கடுமையான விரதமாக கருதப்படுகின்றது.
மேலும் படிக்க | Mohini Ekadasi 2022: நோயற்ற வாழ்வைத் தரும் மோகினி ஏகாதாசி விரதம்
வெயில் கொளுத்தும் கோடையில் தண்ணீர், சர்பத் உள்ளிட்ட பல வகையான பானங்களை குடித்தாலும் வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் இருக்கும் நிலையில், 24 மணி நேரமும் தண்ணீர் கூட இல்லாமல் இருப்பது மிகவும் சிரமமாகும். இருப்பினும், பக்தர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, லட்சுமி தேவி சமேதராக விஷ்ணுவையும், பார்வதி தேவி சமேதராக சிவ பெருமானையும் வணங்குகிறார்கள்.
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், மகாவிஷ்ணு மற்றும் அன்னை லட்சுமி மற்றும் பார்வதி பரமேச்வரனின் அருளால், வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்கி, செல்வச் செழிப்பு பெருகும்.
நிர்ஜல ஏகாதசி விரதத்தில் இந்த விதிகளை பின்பற்றவும்
நிர்ஜல ஏகாதசி விரதம் சற்று கடினமான விரதமாகும். இந்த விரதத்துக்கான சில விதிகள் உள்ளன. இவற்றை கண்டிப்பாக கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்த விரதத்தின் முழு பலன் கிடைக்கும். நோன்பு நோற்காதவர்களுக்கும் சில விதிகள் கூறப்பட்டுள்ளன. இவற்றை கடைபிடிப்பதன் மூலம் அவர்களது வாழ்க்கையும் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.
- நிர்ஜல ஏகாதசி நாளில் கண்டிப்பாக அரிசி சாப்பிடக்கூடாது. விரதத்தின் முந்தைய நாள் இரவிலும், விரதத்தின் மறுநாள் மற்றும் இரவிலும் அரிசி சாப்பிடக்கூடாது.
- விரதம் இருக்கும்போது, பழங்கள் சாப்பிடுபவர்கள், விரதத்தின் போது உப்பு சாப்பிடக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவர்கள் பானங்கள் மற்றும் பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.
- விரதம் இல்லாதவர்கள் இந்த நாளில் அரிசி, பருப்பு, முள்ளங்கி, கத்தரிக்காய், பீன்ஸ் உள்ளிட்டவற்றை உட்கொள்ளக் கூடாது.
- இந்த நாளில் தவறுதலாகவும் அசைவம் மற்றும் மது அருந்த வேண்டாம்.
- நிர்ஜலா ஏகாதசி நாளில் பிரம்மச்சரியத்தைப் பின்பற்றுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறவுள்ளது: மகாலட்சுமி யோகத்தால் அடிச்சது ஜாக்பாட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR