சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் மகாபுருஷ ராஜ யோகம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்

Shani Vakra Peyarchi: சனி தனது சொந்த ராசியில் இருப்பதால், ஷஷ் என்ற மகாபுருஷ யோகம் உருவாகிறது. அக்டோபர் வரை இந்த ராஜயோக பலனால் சில ராசிக்காரர்கள் பெரும் பலன் அடைவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 28, 2022, 05:17 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அருளால் உருவான மகாராஜயோகத்தால் பெரும் பலன் கிடைக்கும்.
  • இந்தக் காலகட்டம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
  • இந்த காலகட்டத்தில் நீங்கள் நிலம் அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பை பெறலாம்.
சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் மகாபுருஷ ராஜ யோகம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும் title=

கிரகங்களில் முக்கிய கிரகமாக கருதப்படுபவர் சனி பகவான். இவர் நாம் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்றவாறு பலன்களை அளிப்பார். சனி பகவான் ஜூலை 12 ஆம் தேதி மகர ராசியில் வக்ரமானார். சனி பகவானின் இந்த நிலை அக்டோபர் 23 வரை இருக்கும். அதன் பிறகு, அவர் தனது இயல்பு நிலைக்குத் திரும்புவார். சனி பகவான் தனது சொந்த ராசியான மகர ராசியில் அமர்ந்துள்ளார். சனி தனது சொந்த ராசியில் இருப்பதால், ஷஷ் என்ற மகாபுருஷ யோகம் உருவாகிறது. அக்டோபர் வரை இந்த ராஜயோக பலனால் சில ராசிக்காரர்கள் பெரும் பலன் அடைவார்கள். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்:

மேஷ ராசிக்கு சனிபகவானின் அருளால் உருவான மகாராஜயோகத்தால் பெரும் பலன் கிடைக்கும். இந்தக் காலகட்டம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிலம் அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பை பெறலாம். இன்பம் பெறலாம். உத்தியோகத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வி கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு கூடும். மேஷ ராசிக்காரர்களுக்கு பயணம் செல்ல வாய்ப்புகள் ஏற்படும். இந்த பயணத்தால் சாதகமான விளைவுகள் ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் அற்புதமான காலம், செல்வம் கொழிக்கும் 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் அருளால் உருவான சஷ்டி என்ற மகா ராஜயோக பலன் முழுமையாக கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலில் வெற்றி பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெறலாம். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும். வேலை தேடும் மாணவர்களுக்கு இந்த காலம் வரப்பிரசாதமாக அமையும். வருமானம் அதிகரிக்கும், பொருளாதார நிலை வலுவாக இருக்கும். 

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் சனிபகவானின் அருளால் திடீர் பணவரவு பெறலாம். இந்த காலத்தில் முடிக்கப்படாத பணிகள் நிறைவடையும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சூழ்நிலை சாதகமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்கள் வரப்பிரசாதமாக இருக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News